பரபரப்பாக நேரத்தை செலவிட விரும்பும் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வரலாம் – இலங்கை பிரதமர்.!

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடிக்கு அரசு தான் காரணம் என்று போராட்டம் மற்றும் வன்முறைகள் நடந்துவருகிறது. இதனை தொடர்ந்து இலங்கையின் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சே பதவி விலகினார். இவ்வாறு பல்வேறு நெருக்கடி மற்றும் பரபரப்பு நிறைந்து இலங்கை காணப்பட்டது.

இதற்கிடையில், தற்போது இலங்கையின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்றார். அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கலவரம் நிறைந்த தீவு நாட்டில் மக்களிடையே பல விருப்பங்கள் உள்ளன. நீங்கள் பரபரப்பான இடங்களில் சுற்றுலா சென்று நேரத்தை செலவிட விரும்புறீர்களா, நீங்கள் இலங்கைக்கு வருகை தரலாம் என்று கேலிக்கையாக கூறியுள்ளார்.

இலங்கை மக்கள் ஒருவேளை ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்கலாம். ஒருவேளை அவர்கள் இலங்கை ஜனாதிபதி வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று எழுதப்பட்ட பதாகைகளை வைத்திருக்கலாம், அல்லது பரபரப்பை எதிர்நோக்கி வருகை தரும் நீங்களும் பிரதமரை வீட்டிற்கு செல்லுமாறு ஒரு பதாகையை பிடிக்கலாம் என்று விமர்சித்துள்ளார்.

தொடர்ந்து நீங்கள் இலங்கைக்கு மக்கள் வருவதை ஊக்குவிக்கவில்லையா என்று கேள்வி கேட்கப்பட்டது. நாட்டில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுவதையும், அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடுகளும் இருப்பதை நாங்கள் புரிந்து கொண்டோம். மக்கள் இலங்கையை விட்டு வெளியேறுவதையும் நாங்கள் ஊக்குவிக்கவில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே கூறியுள்ளார். மேலும் இந்த காணொளி இணையதளத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here