இன்று முதல் விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் சுற்றுலா படகு சேவை தொடக்கம்…!

இன்று முதல் விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் சுற்றுலா படகு சேவை தொடக்கம்…!

இன்று முதல் குமரியிலுள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலா படகு சேவை தொடங்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பொதுமக்கள் கடற்கரை மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து  கடந்த 7ஆம் தேதி முதல் கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு செல்வதற்கான சுற்றுலா பயணிகள் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

இதனால் கன்னியாகுமரிக்குச் செல்லும் சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலைக்கு அருகில் சென்று பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி வரும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் இன்று முதல் கன்னியாகுமரியிலுள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு வசதியாக கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன் படகு போக்குவரத்து தொடங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 12 நாட்களுக்கு பின் இன்று முதல் சுற்றுலா பயணிகள் படகு சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

author avatar
Rebekal
Join our channel google news Youtube