பக்கத்து வீட்டுக்காரர்கள் செய்யும் கொடுமைகளும், அவற்றால் நாம் படும் பாடும்!

குடியிருப்புகளின் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் பல நன்மைகளும் விளையும்; சில தீமைகளும் விளையும். ஆனால் நன்மை மற்றும் தீமைகளை தாண்டி ஏற்படக்கூடிய கொடுமைகள் பற்றி தான் இந்த பதிப்பில் நாம் படித்து அறிய இருக்கிறோம்.

பெரும்பாலும் இந்த கொடுமைகளை அனுபவிப்பது பெண்கள் தான்; ஆகையால் பெண்களே! இந்த பதிப்பை படிக்கையில், உங்களுக்கு ஏற்படும் நிஜ வாழ்க்கை கொடுமைகள் நிச்சயம் நினைவுக்கு வரும். ஆண்களுக்கு ஏற்படக்கூடிய கொடுமைகளும் அளிக்கப்பட்டுள்ளன, வாருங்கள் பதிப்பிற்குள் செல்வோம்!

இரவல் கொடுமை

இரவலாக அது வேண்டும், இது வேண்டும் என்று கேட்டு வரும் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு மறுக்க மனமின்றி, ஒருசில தடவை பொருட்களை கொடுத்து விட்டால் போதும், கடைக்கு சென்று வாங்கும் பழக்கத்தையே மறந்து, தினமும் நம் வீட்டு வாசலில் வந்து நிற்க தொடங்கிவிடுவர்.

காட்சி கொடுமை

பக்கத்து வீட்டு நபர்களின் மாடம் நம் வீட்டிற்கு முன்னதாக, மிக அருகாமையில் அமைந்து விட்டால் அவ்வளவு தான், அவர்கள் காயப்போடும் உள்ளாடைகள் மற்றும் பிற ஆடைகள் நம் கண்களுக்கு காட்சி கொடுமையாக அமைந்து, நம்முடைய மன அமைதியை குலைத்து விடும்.

வைஃபை கொடுமை

பொருளாக இரவல் வாங்கியது போதாதென்று, வை ஃபையின் கடவுச்சொல்லையும் கேட்டு வந்து தொந்தரவு செய்வார்கள், இந்த பைத்தியம் பிடித்த பக்கத்து வீட்டுக்காரர்கள். எதை கேட்பது என்று விவஸ்தை இன்றி எல்லாவற்றையும் கேட்டு வந்து நிற்பர்.

பேச்சு கொடுமை

அவர்களுக்கு வேலை இல்லை எனில், நம் வீட்டில் வந்து அமர்ந்து கொண்டு ஊர் பட்ட வம்பு பேசி நம் நேரத்தை கெடுப்பதோடு, குடும்ப நபர்கள் பேசிக்கொள்ள இருந்த நேரத்தையும் வீணாக்கி சென்று விடுவர்.

வீட்டின் ஜன்னல்கள் எதிரெதிராக அமைந்து பேசும் வகையில் இருந்து விட்டால் போதும், அவர்கள் வீட்டிலிருந்து கொண்டே ஜன்னல் வழியாக பேசி உயிரை எடுப்பர்.

கற்பித்தல் கொடுமை

குழந்தையை எப்படி வளர்ப்பது, சமையல் எப்படி செய்வது என்ற முக்கிய விஷயங்களை கற்றுக்கொடுக்கிறேன், அவ்விஷயங்கள் குறித்த அனுபவத்தை பகிர்கிறேன் என்ற பெயரில் பக்கத்து வீட்டுக்காரர்கள் செய்யும் கொடுமை தான், அனைத்து கொடுமைகளிலும் உச்சகட்டமானது.

author avatar
Soundarya

Leave a Comment