டோரன்ட் கேஸ்: 25 இயற்கை எரிவாயு நிலையங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர்!

பசுமையான சுற்றுசுழலுக்காக டோரன்ட் கேஸ் நிறுவனத்தின் 25 CNG நிலையங்களை காணொளி வாயிலாக முதல்வர் திறந்து வைத்தார்.

Torrent Gas நிறுவனத்தால் எண்ணூர் அருகே உள்ள வல்லூரில் இயற்கை எரிவாயு விநியோகத்திற்காக அமைக்கப்பட்டுள்ள CITY GATE நிலையம் (MOTHER STATION) மற்றும் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 25 CNG நிலையங்களை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி வாயிலாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

இதன் மூலம் 5,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவும், 33 லட்சத்திற்கும் மெளன வீடுகளுக்கு குழாய் மூலமாக சமையல் எரிவாயு விநியோகம் செய்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், சுற்றுசூழல் மாசுபாட்டை குறைக்கும் வகையில் பெட்ரோல், டீசலுக்கு மாற்று எரிபொருள் பயன்பாடு அதிகரிக்க வேண்டும் என்பதே திமுக அரசின் நோக்கம் என்றும் அதற்கு இந்த CNG நிலையங்கள் பங்களிக்கும் எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்