தலித் நண்பன்.? வாழ்த்து கூறி சர்ச்சையில் சிக்கிய பாடலாசிரியர் வைரமுத்து.!

Default Image

ஆசிரியர் தின வாழ்த்து கவிதையில், கவிப்பேரரசு வைரமுத்து, தான் எழுதிய கவிதையில் ‘தலித்’ நண்பன் என குறிப்பிட்டு இருப்பது தற்போது சர்ச்சையாகியுள்ளது.  

இன்று நாடுமுழுவதும் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பள்ளி கல்லூரிகளில் பலரும் தங்கள் ஆசிரியர்களுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

அதில், பலரும் டிவிட்டர் மூலம் தங்கள் ஆசிரியர் தின வாழ்த்தை கூறினர். சினிமா பாடலாசிரியர் கவிபேரரசு வைரமுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் ஆசிரியர் தின வாழ்த்தை தனது புதுக்கவிதை மூலம் தெரிவித்தார்.

அதில், ‘ஆசான்கள் ஆயிரம்பேர். எழுத்தறிவித்தவர் மட்டுமல்லர், ஏர்பிடிக்கக் கற்றுக்கொடுத்தவரும் என் ஆசான்தான். நியூட்டன் மட்டுமல்ல, நீச்சல் கற்றுத்தந்த தலித் நண்பனும் என் ஆசான்தான். நற்றிணை மட்டுமல்ல, நாட்டார்மொழி கற்றுத்தந்த பாமரனும் என் ஆசான்தான். உலகம் வகுப்பறை. ஆசிரியர்களே வணங்குகிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.

இதில் நீச்சல் கற்றுக்கொடுத்த தலித் நண்பன் எனும் வாசகம் தற்போது சர்ச்சையாகியுள்ளது. நண்பனிடம் கூட தலித் என சாதி வேறுபாடு பார்ப்பீர்களா என பலரும் இணையத்தில் கேட்டு வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்