சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாள்-தேசிய இளைஞர் தினம்..!
இன்று சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள் ஆகும்.
சுவாமி விவேகானந்தர் ஜனவரி 12, 1863 பிறந்தார். இவர் இந்தியாவின் தலைசிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவர். இவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா. மேலும் இவர் இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடர் ஆவார். இவரின் கருத்துகள் இளைஞர்களை எழுச்சியடையச் செய்வனவாக அமைந்துள்ளன. இவர் இந்தியாவிலும் மேலைநாடுகளிலும் வேதாந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட பல சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார்.
அதிலும் 1893 ஆம் ஆண்டு சிகாகோவில் உலகச் சமயங்களின் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய இவரது சொற்பொழிவுகள் உலகப்புகழ் பெற்றது. இவரது பிறந்த நாளை இந்திய அரசாங்கம் 1984 ஆம் ஆண்டு தேசிய இளைஞர் தினமாக அறிவித்தது. இதனை 1985 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதி முதன்முறையாக இந்தியா முழுவதும் தேசிய இளைஞர் நாளாக கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.