அதிரடி மன்னன் கெய்ல் சாதனையை முடியடித்த மோர்கன்!

Default Image

நேற்றைய போட்டியில் இங்கிலாந்து அணியும் , ஆப்கானிஸ்தான் அணியும் மோதியது. இப்போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்றது.போட்டி டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி  50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 397 ரன்கள் குவித்தது.பின்னர் இறங்கிய ஆப்கானிஸ்தான் 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 247 ரன்கள் எடுத்து 150 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இப்போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் 71 பந்தில் 148 ரன்கள் விளாசினார். அதில் 17 சிக்ஸர் , 4 பவுண்டரி அடங்கும்.இதன் மூலம் ஒருநாள் போட்டியில் அதிக சிக்ஸர் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.

இதற்கு முன் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி மன்னன் கெய்ல் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 2015-ம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் 16 சிக்ஸர் அடித்தார். அதுவே ஒருநாள் மட்டும் உலகக்கோப்பை போட்டியில் அடித்த அதிக சிக்ஸர் ஆக இருந்தது. நேற்றைய போட்டியின் மூலம் இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் அந்த சாதனையை முறியடித்தார்.
17* – EoinMorgan vs AFG, 2019
16 – Gayle vs Zimbabwe, 2015
11 – M Guptill vs WI, 2015

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்