டிரம்ப் தலைக்கு ரூ.576 கோடி பரிசு என அறிவித்த ஈரான்.!

Default Image
  • ஈரானின் ரகசியப் படைப் பிரிவுத் தலைவா் காசிம் சுலைமானி கடந்த வெள்ளிக்கிழமை இறந்தனர்.
  • மெரிக்க ஜனாதிபதி  டிரம்ப் தலையை கொண்டு வருபவருக்கு 8 கோடி அமெரிக்க டாலர்கள்  பரிசு என அறிவிப்பு.

கடந்த வெள்ளிக்கிழமை பாக்தாத்தில் உள்ள விமான நிலையத்தின் அருகே அமெரிக்கா ஆளில்லா விமானம் மூலம் நடத்திய தாக்குதலில் ஈரானின் ரகசியப் படைப் பிரிவுத் தலைவா் காசிம் சுலைமானி உள்பட 9 போ் இறந்தனர்.

இந்த தாக்குதலால் ஈரானுக்கும்,அமெரிக்காவுக்கும் இடையே போா் ஏற்படும் அபாயம் உள்ளது.நேற்று காசிம் சுலைமானி இறுதி ஊர்வலம் நடைபெற்றது. இந்த இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர்.மேலும் இறுதி ஊர்வலத்தில் ஈரான் கொடியையும் ,காசிம் சுலைமானி புகைப்படம் மற்றும் அமெரிக்காவிற்கு எதிரான வாசகங்களையும் பொதுமக்கள் வசித்தபடி சென்றனர்.

காசிம் சுலைமானின் இறுதி ஊர்வலத்தை அந்நாட்டின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பானது. அப்போது பேசிய  மூத்த அதிகாரி ஒருவர், அமெரிக்க ஜனாதிபதி  டிரம்ப் தலையை கொண்டு வருபவருக்கு 8 கோடி அமெரிக்க டாலர்கள் ( அதாவது இந்திய மதிப்பில் ரூ.576 கோடி) பரிசு வழங்கப்படும் என தெரிவித்தார்.

ஈரானில் மொத்தமாக ஒவ்வொருவரும் 1 அமெரிக்க டாலர் வழங்கி உதவ வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்