காய்கறிகள் நீண்ட நாள் கெடாமல் இருக்கணுமா அப்ப இத செய்ங்க !!!!!!!!!!

Default Image

காய்கறிகள் நீண்ட நாள் கெடாமல் பிரிட்ஜில் இருக்க சூப்பர் டிப்ஸ் :

காய்கறிகள் நாம் எவ்வாறு நீண்ட நாள்கள் பயன்படுத்துவது என்று நமக்கு தெரிய வில்லை.தினமும் அழுகி வீசும் நிலை ஏற்படுகிறது.இந்த நிலை ஏற்படாமல் தடுக்க பின்வரும் வழி முறைகளை பின்பற்றலாம்.

ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் சிறிதளவு நீர் ஊற்றி உப்பு போட்டு முதலில் கேரட்டை  எடுத்து அதன் தோலை சீவி அந்த நீரில்  போட்டு நன்கு கழுவ  வேண்டும்.இவ்வாறு செய்வதால் அந்த காய்கறிகளில் இருக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகள் நீங்கி விடும் .

பின்பு அதனை ஒரு முறை நன்கு நீரில் கழுவி வடிகட்டியின்  மூலம் இருக்கும் நீரை நன்கு வடித்து பின்பு அதை உலர்த்தி ஒரு துணியில் துடைத்து ஒரு டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்தால்  நீண்ட நாள்கள் காய்கறி  கெடாமல் அப்படியே இருக்கும் .

இதே போல் இஞ்சியையும் தோல் சீவி உப்பு நீரில் போட்டு நன்கு கழுவி வடிகட்டியின்  மூலம் இருக்கும் நீரை நன்கு வடித்து பின்பு அதை உலர்த்தி ஒரு துணியில் துடைத்து ஒரு டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்தால்  நீண்ட நாள்கள் காய்கறி கெடாமல் அப்படியே இருக்கும் .

பச்சை மிளகாயையை  காம்பை கிள்ளி விட்டு  உப்பு நீரில் போட்டு நன்கு கழுவி வடிகட்டியின்  மூலம் இருக்கும் நீரை நன்கு வடித்து பின்பு அதை உலர்த்தி ஒரு துணியில் துடைத்து ஒரு டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்தால்  நீண்ட நாள்கள் காய்கறி கெடாமல் அப்படியே இருக்கும் .

இதே போல் கருவேப்பில்லையை உருவி அதையும் உப்புநீரில் கழுவி உலர்த்தி ஒரு துணியில் துடைத்து மற்றும் கொத்த மல்லி இலைகளை வேர்களை வெட்டி அதையும் நன்கு கழுவி உலர்த்தி ஒரு டப்பாவில் போட்டு வைக்க  வேண்டும். இதேபோல் தக்காளியையும் செய்ய வேண்டும்.

மேலும் காலி பிளவரரை சுத்தம் செய்து தண்டு பகுதியை நீங்கி ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் உப்பு,மஞ்சள்தூள் சிறிதளவு சேர்த்து இளஞ்சூட்டில் கொதிக்க வைத்து அதில் காலி பிளவரை சேர்த்து 15 நிமிடம் ஊற வைத்தால் அதில் உள்ள புழுக்கள் ,பூச்சிகள் செத்து விடும்.உடனே பயன்படுத்துவதாக இருந்தாலும்  பயன்படுத்தலாம்.அதனை  உலர்த்தி ஒரு டப்பாவில் போட்டு வைத்தால் நீண்ட நாள்கள் கெடாமல் அப்படியே இருகும்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்