தித்திக்கும் சுவையில் கேரட் பாயசம் செய்வது எப்படி
பண்டிகை நாட்களில் கேரட் பாயாசம் கண்டிப்பாக இருக்கும். இந்த பாயாசத்தை குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.
- தித்திக்கும் சுவையில் கேரட் பாயசம் செய்வது எப்படி?.
தித்திக்கும் சுவையில் கேரட் பாயசம் செய்வது எப்படி என்பதை பற்றி இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.
தேவையான பொருட்கள் :
வெல்லம் – 1/4 கப்
கேரட் -1/4 கப்
தண்ணீர் – தேவையான அளவு
பால் – 1/2 கப்
குங்குமப்பூ – 1 சிட்டிகை
தேங்காய் பால் – ஒரு கப்
ஏலக்காய் தூள் – 1/2 டீஸ்பூன்
நெய் – 4 டீஸ்பூன்
முந்திரி, திராட்சை, பாதாம் – 10
செய்முறை :
கேரட்டை எடுத்து சிறு சிறு துண்டுகளாக வெட்டி மிக்சியில் போட்டு விழுதாக அரைத்து கொள்ளவும். ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி, திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.
பின்பு அதே கடாயில் சிறிதளவு நெய் ஊற்றி கேரட்டை போட்டு 2 நிமிடம் வதக்கவும். ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அரை கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்ததும் வெல்லம் போட்டு நன்றாக கரைந்ததும் வடிகட்டி இறக்கி தனியே எடுத்து வைக்கவும்.
பாத்திரத்தை அடுப்பில் வைத்து பால் ஊற்றி கொதிக்க விடவும். பால் கொதிக்க ஆரம்பித்தவுடன் நெய்யில் வதக்கி வைத்துள்ள கேரட் விழுதை சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து நன்றாக கொதிக்க விடவும்.
பிறகு கேரட் வெந்து பால் நன்றாக வற்றியதும் அதில் வடிகட்டி வைத்துள்ள வெல்ல கரைசலை ஊற்றி 4 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.
பின்பு அதில் தேங்காய் பால் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். கடைசியாக வறுத்த முந்திரி, திராட்சை, பாதாம், குங்குமப்பூ சேர்த்து கலந்து இறக்கவும். இப்போது சூடான சுவையான கேரட் பாயாசம் ரெடி.