வரலாற்றில் இன்று(13.01,2020)… விண்ணில் பறந்த முதல் இந்தியர் பிறந்த தினம் இன்று..

Published by
Kaliraj
  • ராகேஷ் ஷர்மாவிண்வெளியில் பறந்த முதல் இந்தியர் ஆவர்.
  • இவரது பிறந்த தினத்தில் இவரை நினைவு இவரை நினைவுகொள்வோம்.

பிறப்பு:

இவர் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள பாட்டியாலா எனும் பகிதியில், ஜனவரி மாதம் 13ம் நாள்  1949 ஆண்டு  பிறந்தவர். உலக அளவில், ராகேஷ் ஷர்மா விண்வெளிக்குச் சென்ற 128-வது மனிதர் ஆவார்.

Related image

இவர்,விண்வெளியில் 7 நாள் 21 மணி நேரம் 40 நிமிடங்கள்  தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்வி:

ஜனவரி 13ம் நாள்  1949 ஆண்டு பஞ்சாபில்  பிறந்து இருந்தாலும்  தனது பள்ளிப் படிப்பை ஆந்திர பிரதேசம், ஐதராபாத்தில் உள்ள புனித ஜார்ஜ் பள்ளியில் முடித்தார். அதன்பின்னர் 1966-இல் அவர் இந்திய  தேசிய இராணுவப் பள்ளியில் விமானப் படைப் பிரிவில் மாணவராக சேர்ந்து, படிப்பை முடித்தார்.பின் இவர் 1970 ஆண்டுமுதல்  இந்திய விமானப் படையில் பயிற்சி விமானியாக பணியாற்றினார். பின் மீண்டும் 1984ஆம் ஆண்டில் விமானப் படைப்பிரிவின் ஒரு குழு தலைவராக நியமிக்கப்பட்டார்.

விண்வெளி பயணம்:

பின்  விண்வெளிப் பயணத்திற்கு  ராகேஷ் சர்மா 1982ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 20 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கு ஒன்றரை ஆண்டுகள் பயிற்சி அளிக்கப்பட்டது. தகுந்த பயிற்ச்சிகளுக்கு பின் 1984ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்  2 அன்று ராகேஷ் சர்மா விண்வெளிப் பயணத்தை மேற்கொண்டார்.

 

அவருடன் ரஷ்ய விண்வெளி வீரர்கள் இருவரும் சோயுஸ் டி 11 என்ற  விண்கலத்தில் பயணம் மேற்கொண்டனர். பின் இவர்கள் சல்யூட் 7 என்ற விண்வெளி மையத்தில் அவர் தங்கி இருந்தார். அங்கே பல அறிவியல் ஆய்வுகளை இந்தக் குழு மேற்கொண்டது.ராகேஷ் ஷர்மா விண்வெளிக்குச் சென்ற 128-வது மனிதர் ஆவார். இவர்,விண்வெளியில் 7 நாள் 21 மணி நேரம் 40 நிமிடங்கள்  தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெற்ற விருதுகள்:

பின் புவிக்கு திரும்பிய ராகேஷ் சர்மாவுக்கு அவரது பணிகளை பாராட்டி இந்திய அரசின் உயரிய விருதகளில் ஒன்றான  அசோகா சக்ரா விருது கொடுக்கப்பட்டது.

மேலும் இவர், சோவியத் ரஷ்யாவின் நாயகன் மற்றும்  ஆர்டர் ஆப் தி லெனின் ஆகிய விருதுகளையும்  பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Kaliraj

Recent Posts

ஐபிஎல் 2025 : வெளியானது மெகா ஏலம் விதிகள்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…

5 hours ago

தமிழக அமைச்சரவையில் மாற்றம்! துணை முதல்வரானார் உதயநிதி ஸ்டாலின்!

சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…

16 hours ago

ENGvsAUS : “நான் நினைத்தபடி திரும்பி வந்திருக்கிறேன்”! ஜோப்ரா ஆர்ச்சர் நெகிழ்ச்சி பேட்டி..!

லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…

20 hours ago

ENGvsAUS : “அவரிடமிருந்து இங்கிலாந்து அதை தான் எதிர்பார்க்கிறது”! ஸ்டூவர்ட் பிரோட் பெருமிதம்!

சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…

21 hours ago

தமிழக மீனவர்களை விடுவிக்க அமைச்சர் ஜெய்சங்கருக்கு ராகுல் காந்தி கடிதம்.!

டெல்லி : இலங்கையில் புதிய ஆட்சி அமைந்த பின் இலங்கை கடற்படையினரின் ரோந்து அதிகரித்திருப்பதாக தமிழக மீனவர்கள் புகார்கள் அதிகரித்துள்ளது.…

21 hours ago

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டல்.? நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு.!

பெங்களூரு : தேர்தல் பத்திரங்கள் மூலம் பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் நிதி (நன்கொடை) பெற்றுக்கொள்ளலாம் என்ற விதிமுறையை கடந்த…

21 hours ago