உங்க குழந்தைகளுக்கு ஞாபக சக்தியை அதிகரிக்கணும்னு நினைக்கீறிங்களா…?

Default Image

குழந்தைகளுக்கு ஞாபக சக்தி அதிகமாக இருக்கணும்-னா, அது அந்த குழந்தையின் தாயின் கையில் தான் உள்ளது. சிறிய வயதிலேயே நம் குழந்தைகளுக்கு எந்த விஷயத்தையும் மனதில் நன்கு பதியுமாறு கூற வேண்டும். அவ்வாறு சொல்லி கொடுத்தால், அதை குழந்தைகள் எளிதில் மறக்க மாட்டார்கள்.

சில குழந்தைகள் படித்ததையெல்லாம் மறந்து தேர்வில் தெரிச்சியடையாமல் போகும் போது, அது அவர்களுக்கு மன கஷ்டத்தை தந்து வேதனையை தருகிறது. அப்படி இருக்கும் குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிப்பதற்கான சில வழிகள்:

புரியும்படி படிக்க வைத்தல்:

Image result for குழந்தைகளை புரியும்படி படிக்க வைத்தல்:

எதையும் முழு கவனத்தோடு தாய் மொழியிலேயே சிந்திக்க வேண்டும். அதுவே எளிதில் புரிந்து மனதில் பதியும் வண்ணம் இருக்கும். ஒரு வரி புரிய ஒரு நாள் ஆனாலும் பரவாயில்லை, ஆனால் எதையும் புரியாமல் படிக்கக் கூடாது என்று சொல்லி பழக்க வேண்டும்.

படங்களுடன் கூடிய தகவல் :

Image result for படங்களுடன் கூடிய தகவல் :

நிமோனிக்ஸ் வைத்து எதையும் சொல்லி கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால் அதை அவர்கள் மறக்க மாட்டார்கள். படித்தவுடன் எழுதி பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். மேலும் படங்களுடன் கூடிய தகவல் குழந்தைகளுக்கு மிக எளிதில் புரியும்.

மாவுசத்து உள்ள உணவுகளை தவிர்த்தல் :

Image result for மாவுசத்து உள்ள உணவுகளை தவிர்த்தல் :

குறைந்தது 8 மணி நேரமாவது தூங்க வேண்டும். இரவில் சீக்கிரம் தூங்கி அதிகாலை படிக்கும் படி சொல்ல வேண்டும். மாவுசத்து உள்ள உணவுகளை விட, புரதசத்து நிறைந்த எளிதில் செரிக்கும் உணவை சேர்த்து கொள்வது நல்லது. ஏனெனில் மாவுசத்து உள்ள உணவுகள் மந்த நிலையை ஏற்படுத்தும். எனவே அப்படிப்பட்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது.

படித்ததை மீண்டும் நினைவுக்கு கொண்டு வருதல் :

Image result for குழந்தைகள் படித்ததை மீண்டும் நினைவுக்கு கொண்டு வருதல் :

முக்கியமாக தூங்க போகும் முன் அன்று படித்த அனைத்தையும் ஒரு முறை நினைவு படுத்தி பார்க்க வேண்டும். அப்படி செய்தால், நாம் தூங்கினாலும் நம் மூளையின் சில மூலைகள் தகவல்களை ஷார்ட்டெர்ம் மெமரியில் பதிவு செய்து கொண்டு இருக்கும். இது மிகவும் முக்கியமான பயிற்சி ஆகும். ஆகவே இத்தகைய பழக்கத்தை குழந்தைகளுக்கு வரவழைத்தால், அவர்களது ஞாபக சக்தி அதிகரிப்பதோடு, சுறுசுறுப்போடும் இருப்பதற்கு உதவுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்