தீபாவளி ரகளையில் ரசகுல்லா இல்லாமல் எப்படி…..!!!தித்திக்கும் ரசகுல்லா..!!

Default Image

நாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்படும் தீபாவளி இந்த ஆண்டு நவ.6 தேதி முதல் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.சில தினங்களே உள்ள நிலையில் மக்கள் தீபாவளிக்கு தயாராகி வருகின்றனர்.

Image result for DIWALI

அதில் பட்டாசும்,பலக்காரமும் பிரிக்க முடியாதவை பட்டாசு பயலுகளுக்கு குஷி என்றால் அவர்களை அம்மாக்கள் விதவிதமான பலகாரங்களை செய்து அசத்தி குட்டீஸ்களை குஷிப்படுத்து இவர்களுக்கு குஷி என்றே சொல்லலாம் அப்படி தீபாவளி ரகளையில் ரசகுல்லா இல்லாமல் இருந்தால் எப்படி வாங்க ரசகுல்லா செய்வது எப்படி என்று பார்ப்போம்.

Image result for CHILD EAT INDIA

ரசகுல்லா செய்வது எப்படி :

Related image

தேவையான பொருட்கள்

*தண்ணீர் 5 கப்
*சர்க்கரை  5 கப்
*ஏலக்காய் சிறிது

*1 லிட்டர் சுத்தமான  பசும் பாலில் இருந்து எடுக்கப்பட்ட பனீர்  200 கிராம் ஆகிய தேவையான பொருட்களை எடுத்து கொள்ளவும்.

ரசகுல்லா செய்முறை

Related image

முதலில் குக்கரில் 4 கப் தண்ணீரை கொதிக்கவிடவும். கொதிக்கும் தண்ணீருடன் 3 கப் சர்க்கரையை நன்றாக கரைக்கவும்.கரைந்து கொண்டிருக்கும் சர்க்கரை தண்ணீர் கொதித்துக் கொண்டு இருக்கும்  போது எடுத்து வைத்துள்ள பனீரை ஒரு தட்டில் கொட்டி கொண்டு அதனை மெதுவாக வைக்கப்பட்டுள்ள தட்டில் ஒட்டாமல் வரும் வரை நன்றாக தேய்க்கவும். இப்போது நன்றாக தேய்த்த பனீரை சின்ன சின்ன உருண்டை பிடித்து வைக்கும் பொழுது வெடிப்பு  இல்லாமல் உருட்டி மெதுவாக அதாவது அழுத்தாமல் குக்கரில் கொதித்து கொண்டிருக்கும் சர்க்கரை தண்ணீரில் போடவும்.

Image result for rasgulla

மிதமான சூட்டில் இதே போல எல்லாவற்றையும் சேர்த்து சர்க்கரை தண்ணீரில் போட்டு குக்கரை  மூடவும்.சரியாக ஒரு விசில் வந்ததும் குக்கரை இறக்கி விடவும்.பின்னர் குக்கர் நன்றாக ஆறும் வரை காத்திருக்கவும்.பின்னர் வேறு ஒரு கனமான பாத்திரத்தில் சர்க்கரை பாகுவை தயாரிக்க வேண்டும்.இதை 1 கப் தண்ணீர் மற்றும் 2 கப் சர்க்கரை  சேர்த்து நன்றாக  பாகு ஆகும் வரை கொதிக்க விடவும்.

Related image

பாகு பக்குவத்திற்கு வந்ததும் அதனை இறக்கி எடுத்து வைத்திருக்கும் ஏலக்காய் விதையை அதன் மீது தூவி ஆறிய நிலையில் உள்ள குக்கரில் இருக்கும் ரசகுல்லாவை மெதுவாக  உடையாமல் சல்லி கரண்டி கொண்டு எடுத்து வேண்டும் எடுத்த ரசகுல்லாவை  தயார் நிலையில் உள்ள பாகுவில் போட்டு சரியாக 6 மணி நேரம் ஊறிய பின் சுவையான ரசகுல்லா ரெடி தீபாவளியை தித்திக்கும் ரசகுல்லாவோடும்,சந்தோஷத்துடனும் கொண்டாடுவோம்.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்