ஆப்கானிஸ்தான் அரசு ஊழியர்களுக்கு பொது மன்னிப்பு கேட்டு, பணிக்கு திரும்ப தலிபான் அமைப்பு வலியுறுத்தல்.
ஆப்கானிஸ்தான் அரசு அதிகாரிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவதாக தலிபான் அமைப்பினர் அறிவித்துள்ளனர். ஆப்கான் அரசு ஊழியர்கள் அனைவரும் பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது. பொதுமன்னிப்பு வழங்கப்படுவதால் அரசு ஊழியர்கள் முழு நம்பிக்கையுடன் பணிகளை தொடங்கலாம் எனவும் தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், அங்கு உள்ள இந்தியர்களை மீட்கும் பணியை மத்திய அரசு வேகப்படுத்தி உள்ளது. முதற்கட்டமாக நேற்று 129 பேர் தாயகம் திரும்பிய நிலையில், இன்று 120 பேர் அங்கிருந்து அழைத்துவரப்பட்டன. 120 அதிகாரிகளுடன் இந்திய விமானப்படை விமானம் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் தரையிறங்கியது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அரசை பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகள் அங்கீகரித்துள்ளது. ரஷ்யா இதுகுறித்து இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. இதில் இந்தியாவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆப்கானிஸ்தானின் நிலவரங்களை இந்தியா கண்காணித்து கொண்டியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் வன்முறைக்கு உடனடியாக முடிவை ஏற்படுத்தி புதிய அரசு அமைவதற்கான பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ஐநா சபை அவசர கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பெண்கள் உள்பட அனைத்து தரப்பையும் உள்ளடைக்கிய ஒரு புதிய அரசை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
தற்போது தலிபான்கள் கட்டுப்பாட்டில் ஆப்கான் வந்துள்ள நிலையில், மற்ற நாடுகளில் அச்சுறுத்தவோ, தாக்குதல் நடத்தவோ கூடாது என்றும் மற்ற நாடுகளில் உள்ள பயங்கரவாத குழுக்களை ஆதரிக்க கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டது.
பயங்கரவாதிகளின் சொர்ககமாக ஆப்கானிஸ்தான் மீண்டும் மாறிவிடக்கூடாமல் இருப்பதை சர்வதேச நாடுகள் ஒன்றிணைந்து உறுதி செய்ய வேண்டும் என்றும் ஐசபையில் தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் உரையாற்றினார். அப்போது, ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கர்களை வெளியேற்றும் முயற்சிக்கு தாலிபான்கள் இடையூறு ஏற்படுத்தினால், பேரழிவு தாக்குதலை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்காவுக்கு எதிரான அச்சுறுத்தல் ஆப்கானிஸ்தானில் இன்று குறைந்திருப்பதாக குறிப்பிட்ட அமெரிக்க அதிபர், தேவை ஏற்பட்டால் மீண்டும் அமெரிக்கப் படைகள் ஆப்கானுக்கு திருப்பி அனுப்பப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார் என்பது குறிப்பிடப்படுகிறது.
சென்னை : ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு…
சென்னை : தமிழ்நாடு தேசிய கல்வி கொள்கையை ஏற்றால் தான் நிதி தருவோம் என்ற நிலைப்பாட்டுடன் இருப்பதாகவும், தேசிய கல்வி…
டெல்லி : வக்பு வாரியம் என்பது இஸ்லாமிய மக்களால் தானமாக வழங்கப்பட்ட சொத்துக்களை நிர்வகிக்கும் ஒரு இஸ்லாமிய அமைப்பு ஆகும்.…
சென்னை : எம்.ஜி.ஆர் - சிவாஜி காலத்தில் இருந்து சினிமாவில் பாட துவங்கி, தற்போது அஜித் - விஜயை தொடர்ந்து…
ஆப்கானிஸ்தான் : அணியில் பந்துவீச்சில் தூண் என்றால் லெக்-ஸ்பின்னர் ரஷித் கான் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு அணியின் வளர்ச்சிக்கு…
சென்னை : மும்மொழிக் கொள்கை விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் "பெரியார், அண்ணா, கலைஞர்…