ஆஸ்திரேலியாவை எதிர்த்து மோதும் இங்கிலாந்து அணி அறிவிப்பு.

Default Image
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடும் இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டது.
ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி வரும் நவம்பர் 23-ஆம் தேதி ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெறுகிறது.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கும் 16 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த அணியில், ஜேம்ஸ் வின்ஸ், கேரி பேலன்ஸ் ஆகியோர் மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளனர்.
கிரேக் ஓவர்டான், பென் ஃபோக்ஸ், இளம் சுழற்பந்து வீச்சாளரான மேசன் கிரேன் ஆகிய மூன்று புதுமுகங்களும் இதில் இடம் பெற்றுள்ளனர். 
பிரிஸ்டோலில் இரவு நேர கேளிக்கை விடுதியில் 27 வயது இளைஞருடன் மோதலில் ஈடுபட்டதற்காக கைதாகி விடுதலையான துணை கேப்டன் பென் ஸ்டோக்ஸும் அணியில் இடம்பிடித்துள்ளார். 
இந்திய அணி விவரம்:
ஜோ ரூட் (கேப்டன்), மொயீன் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜானி பேர்ஸ்டோவ், ஜேக் பால், கேரி பேலன்ஸ், ஸ்டூவர்ட் பிராட், அலாஸ்டர் குக், மேசன் கிரேன், பென் ஃபோக்ஸ், டேவிட் மாலன், கிரேக் ஓவர்டான், பென் ஸ்டோக்ஸ், மார்க் ஸ்டோன்மேன், ஜேம்ஸ் வின்ஸ், கிறிஸ் வோக்ஸ்.
 
Posted in UncategorizedTagged

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்