அதிர்ச்சி…பாகிஸ்தானில் 6.0 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…20 பேர் பலி;200 பேர் படுகாயம்..!
பாகிஸ்தானில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் சுமார் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தானின் பலோசிஸ்தான் மாகாணத்தில் உள்ளது ஹர்னாய் என்ற நகரத்திலிருந்து வடகிழக்கே 14 கி.மீ. தொலைவில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.இது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளது.
இதனையடுத்து,நிலநடுக்கம் ஏற்பட்டதன் காரணமாக, அந்தப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து, வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சமடைந்தனர். மேலும், நிலநடுக்கம் ஏற்பட்டு வீடுகள் இடிந்து விழுந்ததில் சுமார் 20 பேர் உயிரிழந்தனர் மற்றும் 200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்றும் உயிரிழந்தோர் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து, தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற பேரிடம் மேலாண்மை மீட்புக் குழுவினர், மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இதுகுறித்து,பலோசிஸ்தான் உள்துறை அமைச்சர் மிர் ஜியா உல்லா லாங்கா கூறுகையில்:”நிலநடுக்கம் காரணமாக 20 பேர் உயிரிழந்ததாக எங்களுக்கு தகவல் கிடைத்தது”,என்று கூறினார்.
Earthquake of Magnitude:6.0, Occurred on 07-10-2021, 03:31:11 IST, Lat: 29.94 & Long: 68.34, Depth: 10 Km ,Location: Pakistan for more information download the BhooKamp App https://t.co/rjFPwqritL pic.twitter.com/TllqHRYo5F
— National Center for Seismology (@NCS_Earthquake) October 6, 2021