வறட்சியை தாங்கும் ‘கே-12’ சோளம் : கோயில்பட்டியில் புதிய கண்டுபிடிப்பு

Default Image

பருவமழை பொய்த்து விட்டால், பயிர்கள் வீணாய் போகுமே, கடன் சுமை பெருகுமே என தவிக்கும் விவசாயிகளின் சரியான தேர்வு வெள்ளை சோளம். இந்த வெள்ளை மழை பெய்யாவிட்டாலும், காலநடைகளுக்கு தீவனமான தட்டை கிடைத்ததுவிடும். இதனால் இந்த வெள்ளை மக்கா சோளத்தை அதிக அளவில் பயிரிடுகின்றனர்.

அப்படி மக்கா சோளத்தை விரும்பி பயிரிடும் விவசாயிகளுக்காக கோவில்பட்டி வேளாண் ஆராய்ச்சி மையம் புதிதாக ஒரு சோள வகையை அறிமுகபடுத்தியுள்ளது.

இந்த மக்கா சோளம் ‘கே-12’ என்கிற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. இவை வறட்சியைத் தாங்கி வளர்வதோடு, சன்னமான தட்டை, கனமான கதிர் என  திகழ்கிறது. இந்த ரகம் தமிழக அரசின் அங்கீகாரம் பெற்றிருந்தாலும் மத்திய அரசின் அனுமதி இன்னுமும் கிடைக்காததால் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை. விரைவில் வெளியிடுவதற்கான வேலைகள் நடந்துவருகின்றன.

Posted in Uncategorized

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்