மன அழுத்தத்தை போக்கும் ஏலக்காய்..
ஏலக்காய்யின் நறுமணம் அனைவருக்கும் பிடித்தமான ஓன்று ஆகும்.சமையலில் வாசனைக்காக பயன்படுத்துப்படும் ஏலக்காய், வாசனை பொருட்களின் அரசி என்று அழைக்கப்படுகிறது. பசியைத் தூண்டுவதில் ஏலக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. வாசனைப் பொருளாக பயன்படுத்தப்படும் ஏலக்காயில் மருத்துவ குணம் நிறைந்துள்ளது.
ஏலக்காயின் நறுமணம் கொண்ட விதைகள் வயிற்று வலியினை சரிசெய்கின்றன. ஜீரணத்தை தூண்டுபவை. உடலின் வெப்பத்தை கூட்டி ஜீரணத்தினைத் அதிகப்படுத்தும். மருத்துவத்தில் ஆஸ்துமா, மூச்சுக்குழல் அழற்சி, சிறுநீராகத்தின் கல், நரம்பு தளர்ச்சி, மற்றும் பலவீனம் நீக்க பயன்படுத்தப்படுகிறது.
வாய் துர்நாற்றம் போக்கவும் ஏலக்காய் பயன்படுத்தப்படுகிறது; பாலுணர்வு தூண்டும் பொருளாகவும் உள்ளது. மன அழுத்தத்திற்கு ஏலக்காய் டீயைக் குடிப்பதால் ஏற்படும் புத்துணர்வை அனுபவிப்பதாலும் மன அழுத்தம் சீக்கிரமே குறைகிறதாம்.
வெயிலில் அதிகம் அலைவதால் வரும் தலைசுற்றல், மயக்கத்திற்கு ஏலக்காய் சிறந்த மருந்தாகும். நான்கைந்து ஏலக்காய்களை நசுக்கி, அரை டம்ளர் தண்ணீரில் போட்டு, கஷாயமாகக் காய்ச்சி, அதில் கொஞ்சமாக பனைவெல்லம் போட்டு குடித்தால் தலைசுற்றல் உடனே நீங்கும்.
ஏலக்காய்யில் நறுமணம் மட்டுமல்ல நல்ல மருத்துவ குணங்களும் உள்ளன.அதனை சரியாக பயன் படுத்தி நம் உடலை நல்ல முறையில் பாதுகாத்து கொள்ளலாம்.