சீனாவுக்கும் , அமெரிக்காவுக்கும் இடையே இறக்குமதி பொருட்களுக்கு வரி விதிப்பது தொடர்பாக கடும் மோதல்கள் நிலவி வந்தது. இதில், கடந்தாண்டு ஜூன் மாதத்தில் ஜப்பானின் ஒசாகாவில் நடந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஷி ஜிங்பிங் ஆகியோர் இடையிலான சந்திப்பின் போது, சீன பொருட்களுக்கு புதிதாக வரி விதிப்பதை நிறுத்தி வைக்க அமெரிக்கா ஒப்பு கொண்டது. இதையடுத்து இந்த இரு நாடுகளும் ஒரு ஒப்பந்தம் மேற்கொள்வதென முடிவு செய்தன.இந்நிலையில் அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான முதற்கட்ட ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தம் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் சீனாவின் உயர்மட்ட பிரதிநிதிகள் முன்னிலையில் இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் மற்றும் சீன துணை பிரதமர் லீயு ஹி ஆகிய இருவரும் கையெழுத்திட்டனர். இதன் மூலம் கடந்த 2018-ம் ஆண்டு முதல் வர்த்தக போரை நடத்தி வந்த பொருளாதார வல்லரசுகளான அமெரிக்க மற்றும் சீன நாடுகள் இன்று முதற்கட்டமாக ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி வர்த்தக போரை முடிவுக்கு கொண்டு வந்துள்ளன. இதையடுத்து இந்த இரு நாடுகளுக்கிடையேயான உறவு மீண்டும் புதிதாக துளிர்க்கும் என உலக மக்கள் கருதுகின்றனர்.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…