நாளை விளையாடும் போட்டி…!இன்றே இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் வெளியீடு ..!

நாளை விளையாடும் போட்டியில் 12 பெயர் கொண்ட இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
மேற்கிந்திய தீவுகள் அணிவுடனான முதலாவது டெஸ்ட் போட்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

இந்த போட்டியில் சதம் அடித்த அறிமுக பிரித்திவி ஷா ஆட்டநாயகன் விருதை பெற்றார்.இந்த போட்டியில் இந்திய அணி மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு மிகப்பெரிய தோல்வி ஆகும்.
இந்நிலையில் இந்திய மண்ணில் 266 டெஸ்ட் போட்டிகளை விளையாடியுள்ள இந்திய அணி,நேற்றைய வெற்றியின் மூலம் தனது 100 வது வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இதன் மூலம், சொந்த மண்ணில் 100 டெஸ்ட் போட்டிகளை வென்ற நான்காவது அணி என்ற பெருமையை இந்திய அணி பெற்றது.

இதேபோல் நாளை விளையாடும் போட்டியில் 12 பெயர் கொண்ட இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய அணி வீரர்கள் விவரம்: (நாளைய போட்டி)விராட் கோலி(கேப்டன் ), பிரித்வி ஷா, லோகேஷ் ராகுல்,  ரகானே(துணை கேப்டன்),  ரிஷப் பந்த், குல்தீப் யாதவ், அஸ்வின், ஜடேஜா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், புஜாரா, ஷர்துல் தாகூர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Leave a Comment