சரும அழுக்கை போக்கும் தக்காளி!

சரும அழுக்கை போக்கும் தக்காளி. இன்றைய இளம் தலைமுறையினர்

By leena | Published: Jul 29, 2020 07:00 AM

சரும அழுக்கை போக்கும் தக்காளி.

இன்றைய இளம் தலைமுறையினர் தங்களது சரும அழகை மேம்படுத்துவதற்காக, பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக தங்களது பணத்தை செலவழித்து, பக்கவிளைவுகளை ஏற்படுத்தக் கூடிய கெமிக்கல் கலந்த பொருட்களை வாங்கி  உபயோகப்படுத்துகின்றனர்.

 இந்தப்பதிவில், தக்காளி எவ்வாறு சரும அழுக்கை போக்க உதவுகிறது என்பது பற்றி பார்ப்போம்.

தேவையானவை

  • தக்காளி சாறு - 1 ஸ்பூன்
  • எலுமிச்சை சாறு - சிறிதளவு

செய்முறை

முதலில் தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு பௌலில், தக்காளி சாற்றை எடுத்து வைத்துக் கொண்டு, அதில் சிறிதளவு எலுமிச்சை சாற்றை கலந்து கொள்ள வேண்டும்.

பின் அந்த கலவையை நன்கு முகத்தில் தடவி, 5 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். பின் முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால், சருமத்தில் உள்ள அழுக்குகள் வெளியேறி சருமம் பொலிவாக காணப்படும்.

Step2: Place in ads Display sections

unicc