toll

தமிழகத்தில் நாளை முதல் சுங்க கட்டணம் உயர்வு!

By

தமிழகம் முழுவதும் மொத்தம் 54 சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில், சில சுங்கச்சாவடிளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் கட்டணம் உயர்த்தப்பட்டது. 2023-ம் ஆண்டுக்கான புதிய கட்டண உயர்வு தமிழகம் முழுவதும் மீதமுள்ள 20 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1-ம் தேதி நள்ளிரவு முதல் அமல்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், நாளை முதல் திண்டுக்கல், திருச்சி, சேலம், மேட்டுப்பட்டி, உளுந்தூர்பேட்டை, மதுரை, தூத்துக்குடி உட்பட 20 சுங்கச்சாவடிகளில் இது நடைமுறைக்கு வருகிறது. பாஸ் டேக் இல்லாத வாகனங்கள் இருமடங்கு கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கவலை அடைந்துள்ளனர்.

அதன்படி, அதில் கார், வேன், ஜீப் உள்ளிட்ட வாகனங்கள் ஒருமுறை சென்றுவர 85 ரூபாயிலிருந்து 90 ரூபாயாக உயர்ந்துள்ளது. மாதாந்திர கட்டணம் ரூ.2505 லிருந்து 2740 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. லாரி, பேருந்து உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு ரூ.290-லிருந்து 320 ரூபாயாகவும், இருமுறை சென்றுவர 440ல் இருந்து 480 ரூபாயாகவும் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைக்கப்பட்டாலும், சுங்கச்சாவடி கட்டண உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.