TOKYO2020:பேட்மிண்டன் போட்டியில் இந்தியா வெற்றி…ஆனாலும்,சோகம்…!

டோக்கியோ ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் 3 வது சுற்றில் சாத்விக்சைராஜ், சிராக் ஷெட்டி இணை வெற்றி பெற்றுள்ளது. ஆனால்,ஒலிம்பிக்கின் காலிறுதிக்கு தகுதி பெறவில்லை.

ஒலிம்பிக் 2020 தொடரின் நான்காவது நாள் ஆட்டமான நேற்று இந்திய வீரர்கள், வீராங்கனைகள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனர்.அதன்படி, நடைபெற்ற வாள்வீச்சு போட்டியில் இந்தியாவின் பவானி தேவி தோல்வி அடைந்து வெளியேறினார்.

தோல்வி:

இதனைத் தொடர்ந்து,ஆண்கள் இரட்டையர் பேட்மிண்டன் போட்டியின் இரண்டாவது சுற்றில், இந்தோனேசியாவின் மார்கஸ் பெர்னால்டி, கெவின் சஞ்சயாவிற்கும், இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி – சிராக் ஷெட்டி ஜோடி எதிர்கொண்டது.

ஆரம்பம் முதலே,ஆதிக்கம் செலுத்திய முதல் செட்டை இந்தோனேசிய ஜோடி 21 – 13 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதன்பின் இரண்டாவது செட்டில் இந்திய ஜோடியின் ஆட்டம் மிக மோசமாக இருந்ததால் இரண்டாவது செட்டையும் இந்தோனேசிய ஜோடி 21 – 12 என்ற கணக்கில் கைப்பற்றியது.இதனால்,இந்திய ஜோடி தோல்வி அடைந்தது.

இருப்பினும் முன்னதாக,நடைபெற்ற முதல் சுற்று போட்டியில் சீனாவின் தைபே அணியை வீழ்த்தி இந்தியா ஒரு புள்ளியை பெற்று இருந்தது.

பிரிட்டன்:

இந்நிலையில்,டோக்கியோ ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் 3 வது சுற்றில் சாத்விக்சைராஜ், சிராக் ஷெட்டி ஜோடி,பிரிட்டனின் பென் லேன், சேன் விண்டி ஜோடியை எதிர் கொண்டது.

அதன்படி,ஆட்டம் தொடக்கத்தில் இருந்து விறுவிறுப்பாக சென்றது. ஏனெனில்,முதல் செட்டில் இருந்தே இந்திய ஜோடி ஆதிக்கம் செலுத்தி வந்தது.இதனால்,முதல் பாதியில்  21 – 17 என்ற கணக்கில் இந்திய ஜோடி வென்றது.

வெற்றி – ஆனால்?:

இதனையடுத்து,இரண்டாவது பாதியில் பிரிட்டன் அணி மாறி மாறி புள்ளிகளை பெற்று முன்னேறி வந்தது.எனினும்,இந்திய வீரர் சாய்ராஜ் ராங்கிரெட்டி – சிராக் ஷெட்டி ஜோடி தங்களது சிறப்பான ஆட்டத்தால் 21- 19 என்ற புள்ளி கணக்கில் இரண்டாவது சுற்றையும் கைப்பற்றினர். இதன்காரணமாக,இந்திய ஜோடி 2 – 0 என்ற புள்ளி கணக்கில் பிரிட்டனை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

எனினும்,காலிறுதிக்கு தகுதி பெற முடியவில்லை.இதனால்,இரட்டையர் பிரிவில் பதக்க வாய்ப்பு கனவாகியது. மாறாக,சீனாவின் தைபே மற்றும் இந்தோனேசியா அணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

Recent Posts

முதன் முறையாக தேர்தலில் வாக்களித்த ஷாம்பன் பழங்குடியினர்கள்.! யார் இவர்கள்…

The Shompen Tribes : அந்தமான் நிகோபார் தீவுகளில் வசித்து வந்த ஷாம்பன் பழங்குடியினர் முதன்முறையாக தேர்தலில் வாக்களித்தனர். நாடுமுழுவதும் மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளில் 102…

4 mins ago

முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் தரமாக இருக்கும்…பிரேமலு 2 அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!’

Premalu 2: மலையாள சூப்பர்ஹிட் படமான 'பிரேமலு' படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு மலையாள சினிமாவில் பிரம்மயுகம், மஞ்சும்மல் பாய்ஸ் மற்றும் பிரேமலு…

5 mins ago

உங்க மிக்ஸியில் மறந்தும் இந்த பொருட்களை அரைச்சிடாதீங்க..!

Mixer grinder-மிக்ஸியில் எந்த பொருட்களை எல்லாம் அரைப்பதை தவிர்க்க வேண்டும் என்பதை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். மிக்ஸர் கிரைண்டர்: நவீன இயந்திரங்கள் நம் சமையலறையில் தற்போது முக்கிய…

8 mins ago

நான் வெளிப்படையாகவே சொல்றேன்.. எனக்கு அதுதான் முக்கியம்… கவுதம் கம்பீர்

ஐபிஎல் 2024: எனக்கு செயல்முறையை விட முடிவு தான் முக்கியம் என்று கொல்கத்தா அணி ஆலோசகர் கவுதம் கம்பீர் ஓப்பனாக பேசியுள்ளார். நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின்…

11 mins ago

நெட் ரொம்ப ஸ்லோவா இருக்கா? இதை மட்டும் பண்ணுங்க மின்னல் வேகத்தில் இருக்கும்!!

Mobile Internet Speed Increase : போன் நெட்டை எப்படி வேகமாக மாற்றுவது என்பதற்கான டிப்ஸ் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நம்மில் பலருக்கும் போன் உபயோகம் செய்யும் போது…

50 mins ago

அடுத்த அடி இன்னும் உக்கரமாக இருக்கும்… இஸ்ரேலுக்கு ஈரான் மீண்டும் எச்சரிக்கை!

Iran Israel Conflict: அடுத்த தாக்குதல் பயங்கரமாக இருக்கும் என்று இஸ்ரேலுக்கு ஈரான் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்தாண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் மீது காசாவை சேர்ந்த…

55 mins ago