TOKYO2020:ஒலிம்பிக் மல்யுத்தத்தில் பதக்க வாய்ப்பை இழந்த தீபக் புனியா – பிரதமர் கூறிய வார்த்தைகள்….!

டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இந்தியாவின் தீபக் புனியா பதக்க வாய்ப்பை இழந்தார்.

டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில்,நேற்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 86 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் தீபக் புனியா,நைஜீரிய வீரர் அகியோமோரை 12-1 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

இதனைத் தொடர்ந்து,நடைபெற்ற மல்யுத்தம் காலிறுதிப் போட்டியில் 86 கிலோ எடைப்பிரிவில்,தீபக் புனியா,சீன வீரர் லின் சூசனை 6-3 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

ஆனால்,அதன்பின்னர் நடைபெத்ர் அரையிறுதி போட்டியில் அமெரிக்காவின் டேவிட் மோரிஸினை தீபக் எதிர்கொண்டார்.போட்டியின் இறுதியில் 10-0 என்ற கணக்கில் தீபக் புனியாவை வீழ்த்தி டேவிட் வெற்றி பெற்றார்.இதனால்,வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் தீபக் புனியா விளையாட இருந்தார்.

இந்நிலையில்,இன்று நடைபெற்ற வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியின்,86 கிலோ எடைப்பிரிவில் தீபக் புனியா,சான் மரினோவின் மைல்ஸ் அமினை எதிர்கொண்டார்.இப்போட்டியின் இறுதியில் 4-2 என்ற கணக்கில் புனியா தோல்வியுற்றார். இதனால்,வெண்கலப்பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.

இருப்பினும்,சிறப்பாக விளையாடிய தீபக் புனியா குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:”தீபக் புனியா வெண்கலத்தை இழந்தார்,ஆனால் அவர் நம் இதயங்களை வென்றார். அவர் திறமையின் சக்திமையம். தீபக்கின் எதிர்கால முயற்சிகளுக்கு என் வாழ்த்துக்கள்”,என்று தெரிவித்துள்ளார்.