டோக்கியோ ஒலிம்பிக் போட்டி: தமிழ்நாட்டில் இருந்து மேலும் 5 பேர் தேர்வு!!

டோக்கியோ ஒலிம்பிக்கில் வரும் 31ம் தேதி முதல் தடகள போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், தமிழ்நாட்டில் இருந்து மேலும் 5 பேர் தேர்வு.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெறவுள்ளது. ஒலிம்பிக் போட்டியில் வரும் 31ம் தேதி முதல் தடகள போட்டிகள் தொடங்கவுள்ளது. இந்த தடகள பிரிவில் 26 இந்திய வீரர் – வீராங்கனைகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்கள் பிரிவில் 17 பேர், மகளிர் பிரிவில் 9 பேர் பங்கேற்கவுள்ளனர்.

இதில் தமிழ்நாட்டில் இருந்து மேலும் 5 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தை சேர்ந்த 3 வீராங்கனைகள், 2 வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர். அதன்படி, 4*400 மீட்டர் தொடர் ஒட்டப்பிரிவில் ரேவதி, தனலட்சுமி, சுபா, ஆரோக்கிய ராஜீவ், நாகநாதன் பாண்டி ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

தடகளம், வாள்சண்டை, டேபிள் டென்னிஸ், பாய்மரப்படகு போட்டிகளில் தமிழ்நாட்டை சேர்ந்த 11 வீரர் – வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் பிறந்து வெல்வேறு மாநிலங்களில் குடிபெயர்ந்த 3 வீரர் – வீராங்கனைகளும் ஒலிம்பிக்கில் பங்கேற்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்