பெங்களூரில் சடலங்களை எரிக்க டோக்கன் முறை அறிமுகம்…!

கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பெங்களூரில், சடலங்களை எரிக்க டோக்கன் முறை அறிமுகபடுத்தப்பட்டுள்ளது.  

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், பெங்களூருவில், சடலங்களை எரிக்க டோக்கன் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிற நிலையில், கர்நாடகாவில் நேற்று மட்டும் 147 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் குறிப்பாக பெங்களூரில் மட்டுமே 97 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் சடலங்களை மின் தகன மேடையில் எரிப்பர்.

அந்த வகையில், பெங்களூரை பொறுத்தவரையில் 8 தகன மேடைகள்  உள்ளது. அதில் நாளொன்றுக்கு, ஒரு தகன மேடையில் 20 சடலங்கள் மட்டுமே எரிக்க முடியும். அதற்கு மேல் எரித்தால்,தகன மேடை உருகி விடும். இதனால், அங்கு சடலங்களை எரிக்க டோக்கன் முறை அறிமுகபடுத்தப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.