ரூ. 2500 -க்கான டோக்கன் ! இன்று முதல் விநியோகம்

பொங்கல் பரிசு மற்றும் பரிசு தொகுப்பை பெற இன்று முதல் டிசம்பர் 30 ஆம் தேதி வரை டோக்கன் விநியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு அரிசி ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கப்படும் என்று  முதல்வர் பழனிசாமி தெரிவித்திருந்தார்.இதனுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்றும் அதில், ஒரு கிலோ பச்சரிசி,ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு, திராட்சை,வெல்லம்,முந்திரி,ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களும் இடம்பெறும் என்று அறிவித்தார் .ஜனவரி 4-ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்படும் என்றும் 2.06 கோடி ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

ஆகவே தமிழகத்தில் அனைத்து ஆட்சியர்களுக்கும், உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறைக்கு தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பியது. அதில், பொங்கல் பரிசு மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பை பெற இன்று முதல் டிசம்பர் 30 -ஆம் தேதி வரை டோக்கன் விநியோகம் செய்யப்பட வேண்டும் என்றும் முற்பகல் 100 பேர், பிற்பகலில் 100 பேருக்கு வழங்கும் வகையில் டோக்கன் வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

எக்காரணத்தை கொண்டு ரொக்க பணத்தை உறையில் வைத்து வழங்கக்கூடாது. பொங்கல் பரிசு மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பை ஜனவரி 13- ஆம் தேதிக்குள் வழங்கி முடிக்க வேண்டும் என குறிப்பிட்டது.கொரோனா கால கூட்டத்தை தவிர்க்க, பொது விநியோக கடைக்கு ஒரு குடும்ப அட்டைக்கு ஒருவர் மட்டுமே வரவேண்டும் என வலியுறுத்தினர். குறிப்பிட்ட நாளில் வாங்க முடியாத குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜனவரி 13-ஆம் தேதிக்குள் வழங்கவேண்டும்.ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பும், பரிசு தொகையும் ஒரே நேரத்தில் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Recent Posts

வெற்றிக்கு அருகில் வந்து தோல்வி அடைவது வேதனை அளிக்கிறது… சுப்மன் கில்!

IPL 2024: டெல்லி அணிக்கு எதிரான தோல்வி குறித்து குஜராத் கேப்டன் சுப்மன் கில் வேதனை தெரிவித்தார். நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.…

7 mins ago

கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 89 தொகுதிகளுக்கு நாளை தேர்தல்.!

Phase 2 Election: கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 89 தொகுதிகளில் நாளை தேர்தல் நடைபெறுகிறது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று…

1 hour ago

வெள்ளத்தில் மூழ்கிய கென்யா..பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு.!

Kenya floods: கென்யாவின் பல பகுதிகளில் வெள்ளம் அடித்துச் சென்றதில் பலி எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவில் பெய்த கனமழை காரணமாக…

2 hours ago

ரன் இயந்திரத்தை கட்டுப்படுத்துமா பெங்களூரு ? ஹைத்ராபாத்துடன் இன்று பலப்பரீட்சை!!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக ஹைதராபாத் அணியும், பெங்களுரு அணியும் மோதுகிறது. இந்த ஆண்டில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் 41-வது போட்டியாக…

2 hours ago

பள்ளிகள் திறப்பு தேதியை அறிவித்த முதல் மாவட்டம்.! எங்கு தெரியுமா?

School Reopen: ஜூன் 3ல் பள்ளிகள் திறக்கப்படும் என திருவள்ளூர் முதன்மைக் கல்வி அலுவலர் கூறிஉள்ளார். 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு முன்னதாக…

2 hours ago

DCvGT: கடைசிவரை போராடிய குஜராத்.. டெல்லி அபார வெற்றி..!

IPL2024: குஜராத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்  இழந்து 220 ரன்கள் எடுத்தனர். இதனால் டெல்லி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய ஐபிஎல்…

10 hours ago