தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம்…

By

கடந்த 18ஆம் தேதி சவரனுக்கு ரூ.44,480க்கு விற்பனை ஆன ஒரு சவரன் தங்கம், 10 நாட்களில் ரூ.1,160 உயர்ந்திருக்கிறது.

   
   

தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் தங்களது முதஹலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை பெண்கள் உற்று கவனிப்பதுண்டு.

பங்குசந்தை ஏற்றம் இறக்கம் கண்டால், தங்கம் விலையிலும் மாற்றம் ஏற்படும். கடந்த இரு நாட்களாக தங்கத்தின் விலை சரிவை கண்டு வந்த நிலையில், இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.

(27.10.2023) இன்றைய நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்திருக்கிறது. நேற்று 45,600க்கு விற்பனை ஆன ஒரு சவரன் தங்கம் இன்று 45,640க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.5,705 ஆக உள்ளது. அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து கிராம் ஒன்றுக்கு 77.50ஆகவும், கிலோ வெள்ளி ரூ.77,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

(26.10.2023) நேற்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.45,600க்கும், கிராமுக்கு ரூ.45 அதிகரித்து ரூ.5,700 க்கும் விற்பனையானது. அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ரூ.88.00க்கும், கிலோ வெள்ளி ரூ.88,000க்கும் விற்பனை விற்பனை செய்யப்பட்டது.

Dinasuvadu Media @2023