இன்று நீட் தேர்வு முடிவுகள் வெளியாகிறது

இன்று  நீட் தேர்வு முடிவுகள் தேசிய தேர்வு முகமையின் இணைய தளத்தில் வெளியாகிறது.
நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை  நடத்தி வருகிறது.கடந்த மே மாதம்  நாடு முழுவதும்  மருத்துவ படிப்பிற்கான நுழைவு தேர்வான நீட் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை 15.19 லட்சம் மாணவர்கள் எழுதினர். இந்த தேர்வு தமிழ், ஹிந்தி உட்பட 11 மொழிகளில் நடத்தப்பட்டது. அதேபோல் தமிழகத்தில் 14 நகரங்களில் 188 தேர்வு மையங்களில் 1,34,711 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள்.
இன்று நீட் தேர்வு முடிவுகள் தேசிய தேர்வு முகமையின் இணைய தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.