இன்று வாக்கெடுப்பு., இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும் – அதிமுக

இன்று வாக்கெடுப்பு., இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும் – அதிமுக

நீதிக்காகவும், உரிமைக்காகவும் உலகில் எங்கு போராட்டம் நடைபெற்றாலும் அதற்கு அதிமுக ஆதரவு அளிக்கும் என தம்பிதுரை எம்பி தெரிவித்துள்ளார்.

கடந்த 2009ம் ஆண்டு இலங்கை போரின்போது நடந்த ஈழ இனப்படுகொலைக்கு எதிராக ஐ.நா குழு சமர்ப்பித்த அறிக்கையில், பத்தாண்டுகள் ஆகியும் இலங்கை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகையால், ஐ.நா.சபை கூட்டத்தில் இனப்படுகொலை குற்றங்களைப் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு சென்றிடும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

இலங்கையில், மனித உரிமை மீறப்படுவதாக கண்டனம் தெரிவித்து, இங்கிலாந்து, கனடா, ஜெர்மனி உள்ளிட்ட 6 நாடுகள், ஐநா மனித உரிமை மன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இதன் மீதான வாக்கெடுடுப்பு நேற்று நடைபெற இருந்த நிலையில், திட்டமிடலில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக ஒத்துவைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று மதியம் வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

இந்த நிலையில், ஐ.நா.சபை கூட்டத்தில் இலங்கை போர்க்குற்றத்திற்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு அளிக்க வேண்டுமென அதிமுக தெரிவித்துள்ளது. இதுகுறித்து நாடாளுமன்ற மாநிலங்களைவையில் பேசிய அதிமுக எம்பி தம்பிதுரை, இலங்கை போர்குற்றத்திற்கு எதிராக கொண்டுவந்துள்ள தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

சிறுபான்மை இன தமிழர்கள் மீதான இலங்கை அரசின் கிரிமினல் நடவடிக்கைகள் குறித்து விசாரணை தேவை என்றும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்காவிடில், அங்கு அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய முடியாது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், நீதிக்காகவும், உரிமைக்காகவும் உலகில் எங்கு போராட்டம் நடைபெற்றாலும் அதற்கு அதிமுக ஆதரவு அளிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube