30.5 C
Chennai
Saturday, June 10, 2023

மாநில முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் பணியிடைநீக்கம்… பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு.!

தமிழகப்பள்ளி மாணவர்கள் தேசிய விளையாட்டுப்போட்டிகளுக்கு கலந்து கொள்ளாத விவகாரத்தில்...

புதுச்சேரி காங்கிரஸ் தலைவராக வைத்திலிங்கம் நியமனம்… கார்கே.!

புதுச்சேரிக்கு காங்கிரஸ் தலைவராக வைத்திலிங்கம் எம்.பி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அடுத்த...

இனிமேல் பக்காவான ரைடு..அறிமுகமானது ‘ஹோண்டா டியோ எச்-ஸ்மார்ட்’..! விலை எவ்வளவு தெரியுமா..!

ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம், ஹோண்டா டியோ எச்-ஸ்மார்ட் ஸ்கூட்டரை...

Today’s Live: கர்நாடக சட்டப் பேரவைக் கூட்டத்தொடர் அடுத்த வாரம் தொடக்கம்..!

கர்நாடக சட்டப் பேரவை:

கர்நாடக சட்டப் பேரவைக் கூட்டத்தொடர் அடுத்த வாரம் திங்கள், செவ்வாய் மற்றும் புதன் ஆகிய தினங்களில் நடைபெற உள்ளது.

20.05.2023 4:50 PM

பிரதமர் மோடி வாழ்த்து:

கர்நாடக முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக சிவக்குமாரும் பதவியேற்றுக் கொண்டனர். பதவியேற்பு விழா கோலாகலமாக பெங்களூருவில் நடந்தது. நாட்டின் பல முக்கிய அரசியல் கட்சி தலைவர்களும் இதில் பங்கேற்றனர். இதற்கிடையில், கர்நாடகா முதல்வர் மற்றும் துணை முதல்வராக பதவியேற்றுக் கொண்ட இருவருக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். சிறப்பான பதவிக்காலம் அமைய தனது வாழ்த்துகள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

20.05.2023 4:00 PM

உக்ரைன் அதிபர் சந்திப்பு:

ஜப்பான் தலைநகர் ஹிரோஷிமாவில் நடைபெறும் G7 உச்சி மாநாட்டையொட்டி உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். கடந்த ஆண்டு தொடங்கிய ரஷ்யா – உக்ரைன் மோதலுக்குப் பிறகு 2 தலைவர்களும் சந்திக்கும் முதல் சந்திப்பு இதுவாகும்.

20.05.2023 3:30 PM

ஆர்டிஇ ஒதுக்கீடு:

கல்வி உரிமை (RTE) சட்டத்தில் 25% இடஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு அரசு தான் கட்டணம் செலுத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆர்டிஇ ஒதுக்கீட்டில் மாணவர்களுக்கு சீருடை, புத்தக கட்டணங்களையும் வழங்க வேண்டியது அரசின் கடமை என்றும் இதுதொடர்பாக இரண்டு வாரங்களில் அதிகாரிகளுக்கு உரிய அறிவுரைகளை பிறப்பிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்விதுறை செயலாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

20.05.2023 3:15 PM

5 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்:

காங்கிரஸ் அளித்த 5 வாக்குறுதிகள் இன்றே நிறைவேற்றப்படும் என கர்னாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். பெங்களூரு கண்டீரவா மைதானத்தில் நடைபெற்ற விழாவில் பதவியேற்ற பின் பேசிய அவர், ‘கர்நாடகாவின் புதிய அமைச்சரவை அடுத்த 2 மணிநேரத்தில் கூடும். பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், 200 யூனிட் இலவச மின்சாரம், ரூ.2000 உரிமைத்தொகை உள்ளிட்ட 5 வாக்குறுதிகள் இன்றே நிறைவேற்றப்படும்’ என்றார்.

20.05.2023 2:15 PM

கிணற்றில் விழுந்த சிறுவன்:

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள போஜ்புரா கிராமத்தில் 9 வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சிறுவன் கிணற்றில் விழுந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சிவில் பாதுகாப்பு மற்றும் என்.டி.ஆர்.எஃப் குழுவினர் சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

20.05.2023 1:40 PM

பதவியேற்பு :

கர்நாடக மாநில முதலமைச்சராக இரண்டாவது முறையாக பதவியேற்றார் சித்தராமையா. இதனைத்தொடர்ந்து கர்நாடகாவின் துணை முதலமைச்சராக பதவியேற்றார் டி.கே.சிவக்குமார். முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவகுமார் ஆகிய இருவருக்கும் மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

20.05.2023 12:45 PM

ராகுல்காந்தி வருகை ரத்து:

காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல்காந்தியின் தமிழகம் வருகை ரத்து செய்யப்படுள்ளது. நாட்டின் முன்னாள் பிரதமரும், தந்தையுமான ராஜீவ்காந்தியின் நினைவுதினத்தை (மே 21) முன்னிட்டு, சென்னை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது நினைவிடத்திற்கு மரியாதை செலுத்த ராகுல்காந்தி நாளை தமிழகம் வரவிருந்தார். ஆனால், கர்நாடக முதலமைச்சர் விழா போன்ற பல்வேறு அரசியல் வேலை காரணமாக, அவரது பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

20.05.2023 12:15 PM

காங்கிரஸ் தலைவர்கள் வரவேற்பு:

பெங்களூரு வந்துள்ள காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வத்ராவை கர்நாடக துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள டிகே சிவக்குமார் வரவேற்றார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கர்நாடக அரசின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அவர்கள் வந்துள்ளனர்.

20.05.2023 11:45 AM

யுடிஎஃப் போராட்டம்:

கேரளா மாநிலத்தில் முதல்வர் பினராயி விஜயன் அரசு 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், ஊழல், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிராக ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) போராட்டம் நடத்தி வருகின்றனர்.

20.05.2023 10:15 AM