30.5 C
Chennai
Saturday, June 10, 2023

மாநில முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் பணியிடைநீக்கம்… பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு.!

தமிழகப்பள்ளி மாணவர்கள் தேசிய விளையாட்டுப்போட்டிகளுக்கு கலந்து கொள்ளாத விவகாரத்தில்...

புதுச்சேரி காங்கிரஸ் தலைவராக வைத்திலிங்கம் நியமனம்… கார்கே.!

புதுச்சேரிக்கு காங்கிரஸ் தலைவராக வைத்திலிங்கம் எம்.பி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அடுத்த...

இனிமேல் பக்காவான ரைடு..அறிமுகமானது ‘ஹோண்டா டியோ எச்-ஸ்மார்ட்’..! விலை எவ்வளவு தெரியுமா..!

ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம், ஹோண்டா டியோ எச்-ஸ்மார்ட் ஸ்கூட்டரை...

Today’s Live: தவறான செய்தி பரப்பினால் வழக்குத் தொடருவேன்..! டி.கே.சிவக்குமார் ஆதங்கம்..!

வழக்கு போடுவேன்:

காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. இதுகுறித்து பேசிய சிவக்குமார், பதவியை ராஜினாமா செய்கிறேன் என யாராவது செய்தி வெளியிட்டால், அவர்கள் மீது வழக்குத் தொடருவேன். என் கட்சி எனது அம்மா, இந்த கட்சியை நான் கட்டியமைத்தேன். இங்குதான் 135 எம்எல்ஏக்களும் உள்ளனர் என ஆதங்கமாக பேசினார்.

16.05.2023 5:10 PM

கொலை மிரட்டல்:

மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு நேற்று மாலை அவரது டெல்லி இல்லத்தில் தொலைபேசியில் கொலை மிரட்டல் வந்தது. அமைச்சரின் அலுவலகம் இது குறித்து டெல்லி காவல்துறைக்கு தகவல் அளித்தது, மேலும் இந்த விவகாரம் இப்போது காவல்துறையால் விசாரணையில் உள்ளது.

16.05.2023 4:10 PM

சிபிஐ சோதனை:

டெல்லி, பீகார் உள்ளிட்ட 9 மாநிலங்களில் காலை முதல் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். லாலு பிரசாத் யாதவ் மீதான ரயில்வே பணி நியமன முறைகேடு வழக்கு தொடர்பாகவே இன்று இந்த தேடுதல் வேட்டை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கில் லாலு, அவரது மனைவி ராப்ரிதேவி, மகன் தேஜஸ்வி யாதவ், மகள் மிசா பாரதி உள்ளிட்டோரும் இணைக்கப்பட்டுள்ளனர்.

16.05.2023 1:30 PM

மத்திய அரசு பாராட்டு:

தேசிய சராசரி அளவைவிட தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளுக்கு அதிகளவு மின் விநியோகம் செய்யப்படுவதாக மத்திய எரிசக்தித்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ‘தமிழ்நாட்டில் நாளொன்றுக்கு 22.15 மணி நேரம் மின் வியோகிக்கப்படுகிறது. 24 மணி நேரமும் சீரான மின் விநியோகம் வழங்க மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு உதவும்’ என குறிப்பிட்டுள்ளார்.

16.05.2023 12:40 PM

பிசிஆர் வேன் மீது தாக்குதல்:

டெல்லி சாஸ்திரி பார்க் பகுதியில் நேற்று பிசிஆர் வேன் மீது தாக்குதல் நடத்தி பிசிஆர் ஊழியர்களை தாக்கியதாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் அப்துல் காலித், எம்.டி. ஹசீன் மற்றும் பூல் பாபு என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மீதமுள்ள குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

16.05.2023 11:42 AM

ரோஜ்கர் மேளா:

பிரதமர் நரேந்திர மோடி, அரசுத் துறைகளில் புதிதாகப் பணியமர்த்தப்பட்டவர்களுக்கு சுமார் 71,000 பணி நியமனக் கடிதங்களை காணொளி வழியாக புதிய பணியாளர்களுக்கு காணொலிக் காட்சி மூலம் வழங்கி வருகிறார். ரோஜ்கர் மேளா திட்டம் நாடு முழுவதும் 45 இடங்களில் நடைபெறும், இந்த திட்டத்தின் மூலம் மத்திய அரசு துறைகள் மற்றும் மாநில அரசுகள்/யூனியன் பிரதேசங்களில் ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது.


16.05.2023 11:00 AM

வெடிகுண்டு மிரட்டல்:

டெல்லியில் புஷ்ப் விஹாரின் அமிர்தா பள்ளிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதன்பின் தகவல் அறிந்து வந்த டெல்லி போலீசார் மற்றும் பிற குழுக்கள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து, வெடிகுண்டு செயலிழப்புக் குழு மூலம் பள்ளி முழுமையாகச் சரிபார்க்கப்பட்டது. வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை என துணை போலீஸ் கமிஷனர் சந்தன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

16.05.2023 10:20 AM

ஆகாய நடை மேம்பாலம் திறப்பு:

சென்னை தியாகராயர் நகரில் ரூ.30 கோடியில் கட்டப்பட்டுள்ள ஆகாய நடை மேம்பாலத்தை, இன்று திறந்து வைக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்த மேம்பாலம் மக்கள் பயன்பாட்டுக்கு வருவதால் தியாகராயர் நகர் பேருந்து நிலையத்திலிருந்து, மாம்பலம் ரயில் நிலையத்துக்கு விரைவாகச் செல்ல முடியும்.

16.05.2023 09:50 AM

பரபரப்பு:

சைதாப்பேட்டை அருகே புறநகர் மின்சார ரயிலிலிருந்து 8 பெட்டிகள் திடீரென கழன்றதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். இதனால், சென்னை கடற்கரை – தாம்பரம் ரயில் சேவை சிறுது பாதித்தது. கடந்த 30 நிமிடங்களாக மின்சார ரயில்கள் சேவை நிறுத்தப்பட்டதால் பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்லும் தொழிலாளர்கள் தவித்தனர்.

16.05.2023 08:30 AM

எடப்பாடி பழனிசாமி  விழுப்புரம் வருகை:

விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் குடித்து  உயிரிழந்தோர் எண்ணிக்கை 13-ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரையும் விழுப்புரத்தில் கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தோரின் குடும்பத்தையும் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

இந்நிலையில், அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மரக்காணம் செல்கிறார்.

16.05.2023 07:01 AM