நாகை மாவட்ட ஆட்சியராக ஜானி டாம்வர்க்கீஸ்:
பொதுமக்களுக்கும் மீனவர்களின் பிரச்னைகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பேன் எனவும், விவசாயிகளின் நலன் சார்ந்த விஷயங்களில் அலுவலர்களிடமும் விவசாயிகளிடமும் கருத்து கேட்டு உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பேன் எனவும் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம்வர்க்கீஸ் பேட்டி அளித்துள்ளார்.

27.05.2023 11:25 AM
12 மாவட்டங்களில் கனமழை:
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, திருப்பூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
27.05.2023 07:40 AM
தமிழக கொரோனா:
தமிழ்நாட்டில் நேற்று புதியதாக 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 84 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்
27.05.2023 07:00 AM
24 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு:
கர்நாடகாவில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம், தினேஷ் குண்டுராவ், ஹெச்.கே.பாட்டீல், எஸ்.எஸ்.மல்லிகார்ஜுனா உள்ளிட்ட 24 புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்கின்றனர்.
27.05.2023 06:45 AM