இன்றைய முட்டை விலை..!

இன்றைய முட்டை விலை..!

  • egg |
  • Edited by bala |
  • 2020-08-13 09:57:59

நாமக்கல்லில் முட்டை விலை மாற்றமின்றி 3.60 காசுகளாக விற்பனையாகிறது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது, மேலும் கொரோனா வைரஸ் ஏற்பட்ட துவக்கத்தில் அதிகளவில் அடி வாங்கிய வியாபாரம் என்றால் அது முட்டை வியாபாரம் என்று கூறலாம் , ஆம் 1 ரூபாய்க்கும் கீழ் குறைந்து மிகவும் அதிகளவில் சீப்பாக குப்பைகளிலும் கொட்டப்பட்டது.

இதற்கு பின் வேகமாக முட்டை விலை உயர்ந்து மற்றும் குறைந்து வருகிறது. இந்த நிலையில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் மருத்துவா் பி.செல்வராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. மேலும் கேரளத்தில் ஏற்பட்ட மழை, வெள்ளம் போன்றவற்றால் அங்கு விற்பனையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மற்ற மண்டலங்களிலும் முட்டை விலை குறைந்து வருகிறது.

இந்நிலையில் இன்று ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை நேற்று விலையில் இருந்து மாற்றமின்றி ரூ. 3.60 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.

Latest Posts

சென்னையை வீழ்த்தி டெல்லி 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
சென்னை அணிக்கு 176 ரன்கள் நிர்ணயித்த டெல்லி..!
சீனாவின் ஹவாய் ஆராய்ச்சி ஆய்வகத்தில் தீ விபத்து.!
தாமரைபாக்கம் இல்லத்தில் எஸ்.பி.பிக்கு அஞ்சலி செலுத்த அனுமதி இல்லை
பாடகர் எஸ்.பி.பி உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் - முதல்வர்
லடாக்கின், லேவில் 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்.!
கருப்பு பேண்ட் அணிந்து விளையாடும் சென்னை, டெல்லி அணி வீரர்கள்..!
டெல்லியில் இன்று 4,061 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.!
அனைத்து வரம்புகளையும் கடந்து அனைத்து தரப்பினரையும் கவர்ந்த பேராளுமை எஸ்பிபி - திருமாவளவன்
முழு அரசு மரியாதையுடன் நடைபெற  முதலமைச்சர் ஆவன செய்ய வேண்டும் - மு.க.ஸ்டாலின்