இன்றைய(டிசம்பர் 15) பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்….!

இன்றைய பெட்ரோல் விலை 5 காசுகள் உயர்ந்தும் ,டீசல் விலை 8 காசுகள் குறைந்தும் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து உள்ளது.இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல் அதிகரித்த வண்ணம் இருந்தது. சில நாட்களுக்கு முன் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்றைய 1 லிட்டர் பெட்ரோல் விலை  5 காசுகள் உயர்ந்து  ரூ.72.99 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 1 லிட்டர் டீசல் விலை 8 காசுகள் குறைந்தும் ரூ.68.10 காசுகளுக்கு விற்பனையாகிறது.இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Leave a Comment