இன்றைய (26.07.2021) நாளின் ராசி பலன்கள்..!

மேஷம்:

இன்றைய நாள் பரபரப்பாக காணப்படும். இன்று நீங்கள் ஆன்மீகத்தில் ஈடுபட்டு ஆறுதல் பெறுவீர்கள். பணிகளை மேற்கொள்ளும்போது உங்கள் தனித்திறமையை வெளிப்படுத்துவீர்கள்.

ரிஷபம்:

இன்று நீங்கள் பரபரப்பாக காணப்படுவீர்கள். இன்று உங்கள் செயல்களை புத்திசாலித்தனமாக ஆற்ற வேண்டும். உங்களுள் மறைந்திருக்கும் திறமைகளை வெளிக்கொணர்வதன் மூலம் திருப்தி காண்பீர்கள்.

மிதுனம்:

நீங்கள் பிறரை மகிழ்விக்க முயற்சி செய்வீர்கள். உங்கள விதியை நீங்கள் எற்றுக் கொள்வதன் மூலம் சிறப்பாகவும் நம்பிக்கையுடனும் உணர்வீர்கள்.

கடகம் :

எல்லா விஷயத்திலும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.நீங்கள் அதிகமாக உணர்ச்சி வசப்படுவீர்கள். இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள் அல்ல.
இதனை தவிர்க்க திட்டமிட்டு செயலாற்ற வேண்டும்.

சிம்மம்:

இன்று எடுக்கும் முக்கிய முடிவுகள் நல்ல பலனளிக்கும்.உங்கள் இனிமையான வார்த்தைகளால் உங்கள் நண்பர்களை மகிழ்விப்பீர்கள். இன்று உங்கள் நண்பர்கள் மற்றும் பரிச்சயமானவர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள்.

கன்னி:

அனைத்து விதத்திலும் மகிழ்ச்சி காணப்படும். உங்கள் செயல்களில் தன்னம்பிக்கை காணப்படும். சில முக்கிய முடிவுகளை நீங்கள் எடுப்பீர்கள்.

துலாம்:

பொறுமையான அணுகுமுறை மேற்கொள்ளவும். உணர்ச்சி வசப்பட வேண்டாம். இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்த்தல் அல்லது தள்ளிப்போடுதல் நல்லது.

விருச்சிகம்:

நீங்கள் பல சௌகரியங்களை விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும்.இன்றைய நாள் ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். உங்கள் மனதை அமைதியாக வைத்திருக்க வேண்டியது அவசியம்.

தனுசு:

இன்று உங்களுக்கு சாதகமான நாள். புதிய மனிதர்களை சந்தித்து புதிய அனுபவம் பெறுவீர்கள். புதிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள்.

மகரம்:

இன்று சாதகமான பலன்கள் கிடைக்க உகந்த நாள் அல்ல. இன்றைய சவால்களை திறமையுடன் சமாளிக்க பொறுமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

கும்பம்:

 அதிர்ஷ்டத்தை விட சுய முயற்சியை சார்ந்து செயல் பட வேண்டும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். இன்று எதிர்பார்க்கும் பலன்கள் கிடைக்காது.

மீனம்:

உங்கள் இலக்குகளை அடைவதற்கு அதிர்ஷ்டம் உங்களுக்கு அனுகூலமாக இருக்கும். இன்று நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். மூத்தவர்கள் மற்றும் நலம் விரும்பிகளின் ஆதரவைப் பெறுவீர்கள்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.