இன்றைய நாளின் (24.05.2022) ராசிபலன்கள்..!இன்று இந்த ராசிகள் கவனமாக இருக்க வேண்டும்..!

0
67

மேஷம்: இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக அமையும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் பாராட்டை பெறுவீர்கள். உங்கள் துணையுடன் மிகுந்த மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

ரிஷபம்: இன்று உங்களுக்கு எதிர்பாராத அளவு வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் உங்களின் அசத்தலான திறமையால் பாராட்டு கிட்டும். உங்கள் துணையிடம் அன்பாக இருப்பீர்கள். இன்று பணவரவு திருப்திகரமாக இருக்கும். ஆரோக்கியமாக இருப்பீர்கள்.

மிதுனம்: இன்று நீங்கள் நேர்மறை எண்ணங்களுடன் இருக்க வேண்டும். உத்தியோகத்தில் அதிக கவனம் தேவை. உங்கள் துணையிடம் கவனமாக பேச வேண்டும். இன்று பணவரவு குறைவாக இருக்கும். முதுகுவலி ஏற்பட வாய்ப்புள்ளது.

கடகம்: இன்று திருப்திகரமான நாளாக இருக்காது. உத்தியோகத்தில் கடுமையாக வேலை இருக்கும். உங்கள் துணையிடம் நல்லுறவு ஏற்படாது. இன்று பணவரவு குறைவாக இருக்கும். கால் வலி ஏற்படும்.

சிம்மம்: இன்று உங்களுக்கு வெற்றிகரமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்று நீங்கள் எடுக்கலாம். உத்தியோகத்தில் சிறப்பாக பணிகளை செய்து முடிப்பீர்கள். உங்கள் துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். பணவரவு அதிகமாக காணப்படும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

கன்னி: இன்று நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். அதில் அனைத்திலும் முன்னேற்றம் காண்பீர்கள். மேலும் பணியிடத்தில் சாதகமான பலன்கள் உண்டு. உங்கள் துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். இன்று பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் இன்று சிறப்பாக இருக்கும்.

துலாம்: இன்றைய நாள் நம்பிக்கையோடு செயல்பட வேண்டும். உத்தியோகம் தொடர்பாக அதிக வேலை இருக்கும். அதனால் தவறு நிகழ வாய்ப்புள்ளது. உங்கள் துணையிடம் புரிந்துணர்வு குறைவாக இருக்கும். பணவரவு குறைவாக இருக்கும். மூட்டு வலி ஏற்படும்.

விருச்சிகம்: இன்று உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும். மேலும் பணியிடத்தில் சரியான நேரத்தில் வேலைகளை செய்து முடிக்க இயலாது. உங்கள் துணையிடம் சாதாரணமான அணுகுமுறை வேண்டும். இன்று பணவரவு அதிகமாக இருக்காது. தொண்டை பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

தனுசு: இன்று உங்களுக்கு வளர்ச்சிகரமான நாளாக அமையும். உத்தியோகத்தில் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயம். உங்கள் துணையுடன் நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்த வேண்டும். பணவரவு அதிக அளவு இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மகரம்: இன்று நீங்கள் எந்த விஷயத்தையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டிய நாள். குழப்பங்கள் அதிகமாக காணப்படும். மேலும் பணியிடத்தில் இறுக்கமான சூழ்நிலை நிலவும். உங்கள் துணையிடம் பொறுமையின்றி நடந்து கொள்வீர்கள். இன்று பணவரவு அதிகமாக இருக்காது. செரிமான பாதிப்பு ஏற்படும்.

கும்பம்: இன்று நீங்கள் திறமையுடன் செயல்களை கையாள வேண்டும். உத்தியோகத்தில் அசௌகரியமாக இருப்பீர்கள். உங்கள் துணையை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். இன்று பணவரவு அதிகமாக இருக்காது. கால் வலி ஏற்படும்.

மீனம்: இன்று முன்னேற்றகரமான நாளாக இருக்காது. உத்தியோகத்தில் வேலைகளை மும்முரத்துடன் செய்ய வேண்டும். உங்கள் துணையிடம் வாக்குவாதம் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும். இன்று பணவரவு குறைவாக இருக்கும். குழப்பம் காரணமாக ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here