#TodayPrice:இன்றைய பெட்ரோல்,டீசல் விலையின் நிலவரம் என்ன?..!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக கொண்டு பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.இந்த சூழலில்,பெட்ரோல் மீதான மத்திய கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும்,டீசல் மீதான லிட்டருக்கு 6 ரூபாயும் குறைத்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்  அறிவிப்பு விடுத்தார்.

இதனைத் தொடர்ந்து,மத்திய அரசு கலால் வரியை குறைத்ததன் மூலம் தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.8.22-ம்,டீசல் லிட்டருக்கு ரூ.6.70-ம் குறைக்கப்பட்டது.இந்நிலையில்,சென்னையில் 5 வது நாளாக எந்த மாற்றமுமின்றி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63-க்கும்,டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

எஸ்எம்எஸ் மூலம் பெட்ரோல்,டீசல் விலை:

தினசரி பெட்ரோல் டீசலின் விலையை எஸ்எம்எஸ் மூலம் தெரிந்து கொள்ளலாம்.அதன்படி,இந்தியன் ஆயில் வாடிக்கையாளர்கள் RSP<Space> Dealer Code-ஐ 9224992249 என்ற எண்ணுக்கும்,பிபிசிஎல் நுகர்வோர்கள் RSP<Space> Dealer Code-ஐ 9223112222 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலமும் பெட்ரோல்,டீசல் விலை குறித்த தகவல்களைப் பெறலாம். அதைப்போல்,HPCL நுகர்வோர் HPPrice <Space>Dealer Code ஐ 9222201122 என்ற எண்ணுக்கு அனுப்புவதன் மூலம் விலையை அறிந்து கொள்ளலாம்.

Leave a Comment