இன்று உலக மக்கள் தொகை தினம்!

மக்கள் தொகை என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில், புவியில் வாழும் மக்களின் எண்ணிக்கையை தான் மக்கள் தொகை என்கிறோம். ஒவ்வொரு வருடமும், ஜூலை 11-ம் தேதி உலக மக்கள் தொகை தினமாக அனுசரிக்கப்பட்டது வருகிறது.

உலகில் வாழும் மக்களின் எண்ணிக்கையை கணக்கிடுவதற்காக, பல்வேறு முறைகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டுகிறது. 20-ம் நூற்றாண்டில் மருத்துவ முன்னேற்றத்தால் பசுமை புரட்சியாலும், விவசாய உற்பத்தி பெருக்கத்தால் பல நாடுகளின் மக்களின் இறப்பு விகிதம் குறைந்து, மக்கள் தொகை பெருக்கம் அதிகரித்தது.

தற்போதைய உலக மக்கள் தொகை 750 கோடி என தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், ஐ.நா-ன் அறிக்கைபடி மக்கள் தொகை 2030-ல் 8.6 கோடி என கணக்கிடப்படுகிறது. மேலும், இன்னும் 7 ஆண்டுகளில் மக்கள்தொகை பெருக்கத்தில் இந்தியா, சீனாவை மிஞ்சும் எனக் கணக்கிடப்படுகிறது.

உலக மக்கள் தொகை தினம், மக்கள் தொகை தொடர்பான பிரச்சனைகளின் அவசரத்தையும், முக்கியத்துவத்தையும் குறித்த கவனத்தை ஈர்க்கவே இத்தினம் கொண்டாடப்படுகிறது.

 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.