தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு …. வாட்டி எடுத்த வெயிலுக்கு குட்பாய்….

கத்தரி வெயில் வாட்டி எடுத்த நிலையில் தற்போது வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதுகுறித்து  வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்தாவது,வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில்  ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு  வாய்ப்பு உள்ளதாகவும்,
Image result for weather images
மேலும் கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம், திருச்சி, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, மதுரை போன்ற உள் மாவட்டங்களில் வரும் 24 மணிநேரத்தில் மழை பெய்யக்கூடும் என்றும்,தலைநகர் சென்னையில் சில பகுதிகளில் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும்,இன்று  பகலில் அதிகபட்ச வெப்பநிலையாக  104 டிகிரி வரை பதிவாக வாய்ப்பு உண்டு என்று தெரிவித்துள்ளது.இந்த தகவல் தற்போது தமிழக மக்களிடையே சற்று நிம்மதியை ஏற்ப்படுத்தியுள்ளது.
author avatar
kavitha