அடுத்த 2 நாட்கள் தமிழகத்திற்கு மழை! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தமிழகத்தில் பருவமழையை தொடர்ந்து சில நாட்களாக அநேக இடங்களில் லேசான மற்றும்

By manikandan | Published: Nov 22, 2019 07:56 AM

தமிழகத்தில் பருவமழையை தொடர்ந்து சில நாட்களாக அநேக இடங்களில் லேசான மற்றும் மிதமான மழை  பெய்து வருகிறது. வெப்பச்சலனம் காரணமாக இந்த மழை பெய்து வருகிறது. திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, சுற்றுவட்டாரபகுதிகளிலும், தேனி மாவட்டத்திலில் பெரியகுளம் சுற்றுவட்டார பகுதிகளிலும், கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம், திட்டக்குடி,நெய்வேலி பகுதிகளில் மிதமான மழை பெய்துள்ளது. நாகை மாவட்டத்திலும் அதிகாலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. மேலும் வெப்பசலனம் காரணமாக மேலும் 2 நாட்களுக்கு தமிழத்தில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் லேசான மிதமான மழையும், உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களும் மழை பெய்ய வாய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளது.
Step2: Place in ads Display sections

unicc