இன்று தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு

இன்று  தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று அம்மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறுகையில்,இன்று  தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் மாலை 6 மணி முதல் 12ம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .மேலும் பாஞ்சாலங்குறிச்சியில் மே 10 மற்றும் 11ம் தேதிகளில் நடைபெறவுள்ள வீரசக்கதேவி ஆலய திருவிழாவில் அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று ஆட்சியர் சந்தீப்நந்தூரி தெரிவித்துள்ளார்.

Leave a Comment