#IPL 2020 இன்றைய போட்டி RCBvsKKR… வெற்றி எந்த அணிக்கு..?

இன்று ஐபிஎல் தொடரின் 28- லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகிறது. 

ஐபிஎல் தொடரின் 28-வது லீக் போட்டி ஷார்ஜா மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதுகிறது.

கொல்கத்தா அணி இந்த சீசனில் 6 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது. அதைபோல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் 6 போட்டிகளில் விளையாடி 4 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

இந்த நிலையில் இதுவரை இந்த இரண்டு அணிகளும் 24 முறை மோதியதில் 10 முறை பெங்களூர் அணியும், 14 முறை கொல்கத்தா அணியும் வெற்றி பெற்றுள்ளது. மேலும் இன்று நடக்கும் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெற போகிறது என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.