இன்றைய நாள் (28.06.2020) உங்களுக்கு எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்!

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…

மேஷம் : இன்று உங்களுக்கு அதிர்ஷ்டம் உள்ள நாள். கடினமான பணிகள் கூட எளிதாக முடிந்து விடும். முக்கிய முடிவுகள் எடுக்க ஏற்ற நாள்.

ரிஷபம் : இன்று வளர்ச்சிக்கான பாதையில் நீங்கள் செல்வீர்கள். இருந்தாலும் இன்று நீங்கள் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். நெருங்கிய நண்பர்கள்கூட உங்களுக்கு எதிரிகளாக மாற வாய்ப்புண்டு.

மிதுனம் : ஆன்மீகத்தில் ஈடுபட  ஏற்றநாள். பிரார்த்தனைகள் உங்களுக்கு மன ஆறுதலை தரும். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபடுத்தி கொள்ளுங்கள்.

கடகம் : உங்கள் திறமைகள் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும். ஆன்மீகத்தில் ஈடுபடுவது இன்றைய நாளை சிறப்பானதாக அமைக்கும்.

சிம்மம் : இன்றைய சவால்கள் சற்று கடினமாக இருக்கும். அதனை நீங்கள் திறமையுடன் கையாள வேண்டும். ஆன்மீகத்தில் ஈடுபடுவது உங்களுக்கு மன ஆறுதலை பெற்றுத்தரும். முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம்.

கன்னி : இன்று நம்பிக்கை உணர்வு குறைந்து காணப்படும். எதனையும் நேர்மையாக செய்ய வேண்டும். எதையும் எளிதாக எடுத்து கொள்ளுங்கள் மன அழுத்தம் குறையும்.

துலாம் : இன்று இருப்பதை கொண்டு திருப்தியுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும். அமைதியாக இருக்க வேண்டும். இலக்கை அடைய கடினமாக உழைக்க வேண்டும்.

விருச்சிகம் : இன்று நீங்கள் நம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். முன்னேற்றம் உள்ள நாள். தைரியமும் மன உறுதியும் அதிகமாக இருக்கும் நாள்.

தனுசு : இன்றைய நாள் உங்களுக்கு நம்பிக்கை நிறைந்ததாக இருக்கும். தைரியமும் மன உறுதியையும் காணப்படும் நாள். முன்னேற்றம் உள்ள நாள்.

மகரம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதாரணமாக அமையும். பொறுமையுடன் செயல்பட வேண்டும். கடினமான பணிகளை எளிதாக நீங்கள் எடுத்து கொள்ள வேண்டும்.

கும்பம் : இன்றைய நாள் சற்று மந்தமாக இருக்கும். உங்களிடம் தைரியம் குறைந்து காணப்படும். நேர்மையான சிந்தனைகள் உங்களை ஆற்றலுடன் செயல்பட வைக்கும்.

மீனம் : முன்னேற்றம் உள்ள நாள். வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கும். அதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும். உங்கள் தகவல் தொடர்பு சிறப்பாக இருக்கும்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.