இன்றைய நாள் (27.07.2020) எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ... மேஷம் : இன்றைய

By manikandan | Published: Jul 27, 2020 06:01 AM

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ...

மேஷம் : இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பாக அமையும். குறித்த நேரத்தில் செயல்களை செய்து முடிப்பீர்கள். உங்கள் புத்திசாலித்தனம் பயன்படுத்துவீர்கள்.

ரிஷபம் : வெளியிடங்களுக்கு செல்வீர்கள். அது உங்களுக்கு மன ஆறுதலை தரும். எதார்த்தமான அணுகும் முறை நல்ல பலனை தரும். தியானம் மேற்கொள்வது சிறந்தது.

மிதுனம் : இன்று நன்றும் தீதும் கலந்து காணப்படும். மனது தெளிவாக இருக்கும். ஆன்மிக நிகழ்ச்சிகளில் ஈடுபடுவது மன ஆறுதலை தரும்.

கடகம் : தியானம் மேற்கொள்வது மன ஆறுதலை தரும். எதிர்மறை எண்ணங்களை தவிர்க்க வேண்டும். தேவையற்ற எண்ணங்களை மனதில் இருந்து நீக்கி விடுங்கள்.

சிம்மம் : முன்னேறுவதற்கு ஏற்ற நாளாக இன்று அமையும். முறையாக திட்டமிட்டு செயல்பட்டால் வளர்ச்சி கிட்டும். மன உறுதி இன்று உங்களிடத்தில் நிறைந்து காணப்படும்.

கன்னி : ஆன்மீகத்தில் ஈடுபடுவது நல்ல பலன் தரும். யோகா மற்றும் தியானம் நல்ல பலனை தரும். இன்று நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

துலாம் : உங்கள் இலக்குகளை அடைவதில் தடைகள் காணப்படும். இருந்தாலும் மன உறுதியுடன் செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். பாதைகள் கடினமாக இருக்கும்.

விருச்சிகம் : விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். அமைதியும் மனத்தெளிவும் காணப்படும். இன்றைய நாளை சிறப்பாக மாற்ற உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும்.

தனுசு : இறைவழிபாடு இன்று உங்களுக்கு நல்ல பலனை தரும். முன்னேற்ற பாதையில் செல்லுங்கள். உங்களுக்கு விருப்பமானவற்றை தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்.

மகரம் : இன்றைய நாள் மிகவும் மகிழ்ச்சியாக அமையும். நீங்கள் மன திடத்துடன் காணப்படுவீர்கள்.

கும்பம் : சுற்றி உள்ளவர்களோடு ஒத்து செல்ல வேண்டிய நாள். தேவைப்படுவோருக்கு உதவி செய்யுங்கள். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் இன்று நீங்கள் ஈடுபடலாம்.

மீனம் : இன்றைய நாள் உணர்ச்சிகரமாக இருக்கும். விரைந்து முடிவெடுக்காதீர்கள். சூழ்நிலைக்கு தக்கவாறு நடந்து கொள்ளுங்கள். ஆன்மீகத்தில் ஈடுபடுவது இன்றைய நாளை எளிதாக மாற்றும்.

Step2: Place in ads Display sections

unicc