இன்றைய நாள் (27.05.2020) உங்களுக்கு எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்…

மேஷம் : இன்று வெற்றி கிட்டும் நாள். அனைத்து செயல்களும் எளிதில்  முடிவடையும். ஆற்றல் மிகுந்து காணப்படுவீர்கள். 

ரிஷபம் :இன்று பதட்டமாக காணப்படுவீர்கள். இசை கேட்பது போன்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபடுங்கள். அதன் மூலம் மன ஆறுதல் கிடைக்கும்.

மிதுனம் : இன்றைய நாள் சிறப்பானதாக இருக்காது. முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். எதனையும் எளிதாக எடுத்து கொள்ளுங்கள்.

கடகம் : பொறுப்புகள் அதிகமாகும் நாள். இன்றைய சூழ்நிலையை சமாளிக்க அதிகமாக சிந்திப்பீர்கள். கவலை உள்ள நாள்.  பாதுகாப்பின்மை போன்ற உணர்வை தவிர்த்திடுங்கள். பிரார்தனைகள் மனஆறுதலை தரும்.

சிம்மம் : இன்று மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இன்றைய சூழ்நிலைகள் உங்களை உற்சாகமாக வைத்திருக்கும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள். முக்கிய முடிவுகளை எடுக்க ஏற்ற நாள்.

கன்னி : கடின உழைப்பின் மூலம் இன்றைய நாளை சிறப்பாக்கிக் கொள்ளலாம். இன்றைய நாளை சிறந்த முறையில் உபயோகிப்பதன் மூலம் உங்களின் திறமையை நிரூபிக்கலாம்.

துலாம் : இன்றைய நாளை திட்டமிட்டு பயன்படுத்தி கொள்ளுங்கள். சில சமயம் பொறுமையை இழக்க நேரிடலாம். அமைதியாக இருப்பது நல்லது.

விருச்சிகம் : கடுமையாக உழைத்தால் வெற்றி நிச்சயம். இன்றைய நாள்உங்களுக்கு கடினமாக இருக்கும். தன்நம்பிக்கையோடு செயல்பட்டால் விரும்பியவை கிடைக்கும்.

தனுசு : திட்டமிட்டு செயல்பட்டால் இன்றைய நாள் அற்புதமாக அமையும். உங்கள் திறமையை மேம்படுத்தினால் வெற்றிகள் கிடைக்கும். புத்திசாலித்தனத்தை பயன்படுத்த வேண்டிய நாள்.

மகரம் : இன்றைய நாள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நேர்மறையான எண்ணங்களுடன் செயல்பட்டால் வெற்றிகரமான பலன்கள் கிடைக்கும். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.

கும்பம் : தெளிவான மனநிலையுடன் இருக்க வேண்டிய நாள். இன்று உங்கள் பேச்சில் தெளிவு நிறைந்திருக்கும்.

மீனம் : பொறுமையாகவும் மனஉறுதியுடனும் இருக்க வேண்டியது அவசியம். திட்டமிட செயல்பட வேண்டியது முக்கியம். இன்று உங்களுக்கான சில சௌகரியங்களை இழக்க நேரிடலாம்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.