இன்றைய நாள் (26.07.2020) எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்!

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள்... மேஷம் : இன்றைய

By manikandan | Published: Jul 26, 2020 06:01 AM

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள்...

மேஷம் : இன்றைய நாள் நீங்கள் விரும்பும்படியாக இருக்கும். நீங்கள் நினைத்தவை எளிதில் நிறைவேறும். உங்கள் திட்டங்கள் பயன் தரும்.

ரிஷபம் : திட்டமிட்டு செயல்பட்டால் இன்றைய நாள் சுமுகமாகவும் வெற்றிகரமாகவும் அமையும். உங்கள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி இன்றைய நாளை உங்களுடையதாக மாற்றி கொள்ளலாம்.

மிதுனம் : இன்றைய நாள் உங்களுக்கு பயன் தரும் வகையில் அமையும். வருத்தங்களை குறைத்துக்கொள்ளவேண்டும். உங்கள் விருப்பங்களுக்கு நேரத்தை ஒதுக்கி அதில் உங்கள் திறமையை மேம்படுத்த வேண்டும்.

கடகம் : உங்கள் முயற்சிகள் வெற்றிக்கு சாதகமாக அமையும். இன்று உங்களுக்கு அற்புதமான நாள். நீங்கள் எடுக்கும் முடிவுகள் முன்னேற்றத்தை தரும்.

சிம்மம் : எதனையும் எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டும். இன்று பொறுமையை கையாள வேண்டும். உங்களுக்கு பொறுப்புகள் அதிகமாக இருக்கும்.

கன்னி : ஆன்மிக சொற்பொழிவுகளைக் கேட்பது கோவிலுக்கு செல்வது உங்களுக்கு மன ஆறுதலை தரும். முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். தியானம் நல்ல பலனை தரும்.

துலாம் : உங்களின் விரைவான செயல்பாடு வெற்றியை தேடித்தரும். விலைமதிப்புள்ள பொருட்களை பாதுகாப்பாக வைக்க வேண்டும். எச்சரிக்கையாய் இருப்பது நல்லது.

விருச்சிகம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையும். நல்ல பலன்கள் கிடைக்கும். திட்டமிட்டு செயல்பட வேண்டும்.

தனுசு : இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பாக அமையும். சுற்றத்தாரின் ஆதரவு கிடைக்கும். இன்று உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.

மகரம் : இறைவழிபாடு நல்ல பலனைத் தரும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.

கும்பம் : இன்று உங்களுக்கு தேவையான பலன்கள் கிடைக்காது. அமைதியை கையாளவேண்டும். பொறுமையுடன் செயல்பட வேண்டும்.

மீனம் : இன்று நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். முக்கிய முடிவுகளை எடுக்க ஏற்ற நாள். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். இன்றைய நாள் வெற்றியுடன் இருக்கும்.

Step2: Place in ads Display sections

unicc