இன்றைய நாள் (26.05.2020) உங்களுக்கு எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்

இன்றைய நாள் (26.05.2020) உங்களுக்கு எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…

மேஷம் : செயல்கள் தாமதமாக நடைபெறும். மனதில் எழும் பதட்டத்தை கட்டுப்படுத்த வேண்டிய நாள். ஆன்மீகத்தில் ஈடுபடுங்கள்.

ரிஷபம் : இன்றைய நாள் மிகவும் அமைதியாக இருக்கும். இன்றைய நாள் சௌகரியமாக அமையும். திருப்தியான மனநிலையுடன் காணப்படுவீர்கள். 

மிதுனம் : மகிழ்ச்சியுடன் இருக்க ஏதுவான சூழ்நிலைகள் அமையாது.  குழப்பமான மனநிலையுடன் காணப்படுவீர்கள். இன்று எடுக்கும் முடிவுகள் தவறாக அமைய வாய்ப்புள்ளது.

கடகம் : மகிழ்ச்சி குறைவான நாள். நம்பிக்கை குறைந்து காணப்படும். திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி அடைய முடியும்.

சிம்மம் : திருப்தியான பலன் காண மனதினை அமைதியாக வைத்திருக்க வேண்டும். தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளுங்கள்.

கன்னி : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையும். கூடுதல் பலன்கள் அதிகமாக கிடைக்கும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம்.

துலாம் : இன்று மகிழ்ச்சி இருக்கும் நாள். செயல்கள் நல்லதாக அமையும். தியானம் மேற்கொள்வது நல்ல பலனை தரும்.

விருச்சிகம் : உங்களிடத்தில் எதிர்மறை எண்ணங்கள் வெளிப்படும். அதனை தவிர்த்து கொள்ளுங்கள். யதார்த்தமான அணுகுமுறையை மேற்கொள்ளுங்கள்.

தனுசு : தியானம் மேற்கொள்ளுங்கள். அதன் மூலம் மனம் ஓய்வாக இருக்கும். இன்று எதோ ஒன்று இழந்தது போன்ற உணர்வு ஏற்படும். பாதுகாப்பில்லாதது போன்ற உணர்வு ஏற்படும். எதனையும் எளிதாக எடுத்து கொள்ளுங்கள்.

மகரம் : ஆற்றல் மிகுந்து காணப்படும். மனஉறுதியுடன் கடுமையாக உழைத்தால் இன்றைய நாள் உங்களுக்கானது. திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி உங்களுக்கானது.

கும்பம் : இன்று நீங்கள் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். திட்டமிட்டு   செயல்களை மேற்கொள்ளுங்கள். செயல்கள் எளிதாக முடியும்.

மீனம் : ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சிகளை கலந்து கொள்ளவேண்டிய நாள். இன்று பயனுள்ள நாளாக இருக்கும்.  

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube