இன்றைய நாள் (23.07.2020) எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்!

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ... மேஷம் : இன்று

By manikandan | Published: Jul 23, 2020 06:01 AM

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ...

மேஷம் : இன்று நீங்கள் அமைதியாக இருக்கவேண்டும். உணர்ச்சிவசப்படுதலை கட்டுப்படுத்தவேண்டும்.

ரிஷபம் : இன்று சுமாரான வளர்ச்சி காணப்படும். பொறுமையும், மனவுறுதியும் இருந்தால் உங்கள் இலக்கை வெற்றிகரமாக அடையலாம்.

மிதுனம் : உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள். நீங்கள் அமைதியுடன் இருக்க வேண்டும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் நல்ல பலனைத் தரும்.

கடகம் : இன்று நீங்கள் பதட்டமாக காணப்படுவீர்கள். எதனையும் எளிதாக எடுத்து கொள்ள வேண்டும். முக்கிய முடிவுகள், முக்கிய முயற்சிகள் எடுப்பதை இன்று தவிர்க்க வேண்டும்.

சிம்மம் : இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சிகரமாக அமையாது. ஆன்மீகத்தில் ஈடுபடுவது மன ஆறுதலை தரும். தன்னம்பிக்கையுடனும், மன உறுதியுடனும் நீங்கள் செயல்பட வேண்டும்.

கன்னி : இன்று உங்களுக்கான சில அசௌகரியங்களை விட்டுக்கொடுக்க வேண்டி வரும். கடினமான சூழ்நிலைகளை சமாளிக்க வேண்டியிருக்கும். பொறுமையுடன் இருக்க வேண்டும்.

துலாம் : முன்னேறுவதற்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். அதற்கான மனவலிமையும் உற்சாகமும் உங்களிடத்தில் காணப்படும். இன்றைய நாள் செழிப்பாக இருக்கும்.

விருச்சிகம் : முன்னேறுவதற்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். ஆன்மீகத்தில் ஈடுபடுவது உங்களுக்கு மன தெளிவை தரும். கடினமான சூழ்நிலையை கூட எளிதாக கையாளுவீர்கள்.

தனுசு : இன்றைய நாள் சற்று மந்தமாக காணப்படும். பாதுகாப்பு இல்லாதது போல உணர்வீர்கள். எந்த விஷயத்தையும் எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

மகரம் : இன்று உங்கள் தன்னம்பிக்கை குறைவாக காணப்படும். நம்பிக்கை இல்லாதது போல உணர்வீர்கள். உங்கள் லட்சியங்களை அடைவதில் சில தடைகள் காணப்படும்.

கும்பம் : வளர்ச்சியுள்ள நாள். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள். நீங்கள் எடுக்கும் முக்கிய முடிவுகள் நல்ல பலன்களை கொடுக்கும்.

மீனம் : இன்றைய தருணங்கள் உங்களை உற்சாகமாக வைத்திருக்கும். அடுத்தகட்ட வளர்ச்சி இன்று இருக்கும். திட்டமிட்டு செயல்படுவதால் உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும்.

Step2: Place in ads Display sections

unicc