இன்றைய நாள் (23.06.2020) உங்களுக்கு எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்!

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ... மேஷம் : பொறுப்புகள்

By manikandan | Published: Jun 23, 2020 06:01 AM

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ...

மேஷம் : பொறுப்புகள் அதிகம் உள்ள நாள். ஆன்மீகத்தில் ஈடுபடுங்கள் அது உங்களுக்கு மன ஆறுதலை தரும்.

ரிஷபம் : இன்றைய தினம் உங்களுக்கு அமைதியாக இருக்கும். நம்பிக்கையுடனும் மன உறுதியுடனும் இருக்கவேண்டும். பதட்டத்தை தவிர்த்திடுங்கள்.

மிதுனம் : இன்று நீங்கள் நேர்மையாகவும் உண்மையாகவும் இருக்கவேண்டும். உணர்ச்சிவசப்படுதலை கட்டுப்படுத்தவேண்டும். திட்டமிட்டு செயல்பட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

கடகம் : இன்று நீங்கள் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும். சில சௌகரியங்கள் உங்களுக்கு குறைந்து காணப்படும். ஆதலால் இன்று மனம் திருப்தி அடைவது கடினம்.

சிம்மம் : இன்று நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். அதனை பயன்படுத்தி கொள்வது மூலம் சிறந்த பலன் உங்களுக்கு கிடைக்கும்.

கன்னி : இன்று உங்களுக்கான லட்சியத்தை நீங்கள் அமைத்து கொள்ள வேண்டிய நாள். அதற்காக அதனை அடைய நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும்.

துலாம் : இறை வழிபாடு உங்கள் மனதினை கட்டுப்பாடுடன் வைத்திருக்கும். அது உங்களுக்கு மன ஆறுதலையும் மகிழ்ச்சியையும் பெற்றுத்தரும்.

விருச்சிகம் : இன்று உங்கள் மனதில் சஞ்சலம் ஏற்படும். அதனை தவிர்த்து நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும்.

தனுசு : இன்று மன உறுதியுடன் காணப்படுவீர்கள். அதன்மூலம் சிறந்த பலன்கள் கிடைக்கும். உங்கள் மீது நம்பிக்கை வைப்பதன் காரணமாக வெற்றி உங்கள் வசப்படும்.

மகரம் : இன்றைய நாள் சிறப்பானதாக அமையாது. இறைவழிபாடு மூலம் இன்றைய நாளை நீங்கள் கடந்து செல்லலாம். குடும்பத்தாருடன் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது.

கும்பம் : நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டிய நாள். துடிப்புடன் செயல்பட வேண்டிய நாள். தேவையற்ற கவலைகளை தவிர்த்திட வேண்டும்.

மீனம் : நீங்கள் வெளியூர்களுக்குச் சென்று வரலாம். உணர்ச்சிவசப்படுதலை கட்டுப்படுத்தி யதார்த்தமாக இருக்க வேண்டும்.

Step2: Place in ads Display sections

unicc